கொடைக்கானல் விவசாயிகள் இரண்டு பிரபல நடிகர்கள் மீது அளித்திருக்கும் புகார் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா அவர்களின் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கூட்டத்தின் போது, கிராம மக்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அதிகாரியிடம் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு அனைவரும் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கையில், அந்த ஊர் தலைவர் மகேந்திரன், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதாவது; கிட்டத்தட்ட 15 வருடங்களாக நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அரசாங்கம் சாலை வசதி ஏற்படுத்தித் தரவில்லை.
இவ்வாறு இருக்கையில், கடந்த மே மாதத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்படி, எங்கள் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. மலை கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க இடத்தில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் மூன்றுமாடி கட்டிடம் எழுப்பி வருகிறார். சாலையை ஆக்கிரமித்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து கேட்கச் சென்றால், தரக்குறைவாக பேசுகிறார்கள். அரசாங்க நிலத்தில் திடீரென JCB இயந்திரங்கள் வைத்து தோண்டுகிறார்கள் கட்டிடம் கட்டுகிறார்கள். எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால், இதில் ஏதோ முறைகேடு இருக்கிறது என்பது மட்டும் எங்களுக்கு புரிகிறது. சட்ட விரோதமாக மிகப்பெரிய கட்டிடங்களை கட்டி வருபவர்கள் சினிமா பிரபலங்கள் என்பதால் பலமுறை புகாரளித்தும் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வனத்துறையினரும் எப்படி அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது. மேலும், அவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, இதற்கு அரசாங்கம் தான் தக்க நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பிரகாஷ் ராஜ் சந்திராயன் குறித்த சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்பொழுது கொடைக்கானல் விவகாரம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் சில தினங்களுக்கு முன்பு அவருடை சமூக வலைத்தள பக்கத்தில் சந்திரயான்-3 குறித்து ஒரு பதிவு செய்திருந்தார், அதில், ‘‘வாவ், நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் ‘‘வாவ், முதல் புகைப்படம்” என குறிப்பிட்டு ‘ஒருவர் தேநீர் ஆற்றும்’ புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் அவர் மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்வதாக பலரும் பிரகாஷ் ராஜுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்.
பிரகாஷ் ராஜ் பதிவுக்கு பலரும் கொந்தளித்து போய் கடுமையாக பிரகாஷ்ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இந்நிலையில் தற்பொழுது பிரகாஷ் ராஜுக்கு எதிராக கொடைக்கானலில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்ற்றனர், மேலும் சந்திராயன் விவகாரத்தில் பிரகாஷ் ராஜு மீது கடும் கோபத்தில் இருந்தவர்களுக்கு கொடைக்கானல் விவகாரம் பிரகாஷ் ராஜை வெச்சு செய்வதற்கு வாய்ப்பாக அமைத்துள்ளது.