மகாத்மா கொலையை ஆதரிப்பவர்கள் அவர்கள்… தேசிய விருது குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரகாஷ் ராஜ்..

0
Follow on Google News

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய திரைத் துறை சார்ந்தவர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.‌‌

இதில் தேசிய விருது வென்றவர்களுக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்தி வருகின்றனர். இந்த முறை தேசிய விருது அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்களுக்கு விருது அறிவிக்கப்படாததற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில், கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பிற படங்களை காட்டிலும் விமர்சன ரீதியிலாகவும், வசூல் ரீதியிலாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய் பீம் படத்திற்கும்,

அந்தப் படத்தில் நடித்த லிஜோ மோலுக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சென்ற முறை சூரரைப் போற்று படத்திற்காக விருதை வென்ற சூர்யா, இந்த முறை ஜெய் பீம் படத்திற்காக வாங்குவார் எனவும் கருதப்பட்டு வந்தது. ஜெய்பீம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது மணிகண்டனுக்கு கிடைக்கும் எனவும் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், ஜெய்பீம் படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. கடைசி விவசாயி படத்திற்கு மட்டும் ஸ்பெஷல் ஜூரி பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெய்பீம் குறித்து பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஜெய்பீம் பட போஸ்டர் மற்றும் கவிதை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது,

நம் மகாத்மாவின் கொலையை ஆதரிப்பவர்கள்..பாபாசாகேபின் அரசியலமைப்பை மாற்ற விரும்புபவர்களா ஜெய்பீமை கொண்டாடுவார்கள்??? என தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜ் இந்த பதிவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள், கடந்த முறை சூரரை போற்று படத்திற்காக சூர்யா உட்பட பல தமிழ் திரையுலகினருக்கு விருது கிடைத்தது.

அப்போது தேசிய விருதை கொண்டாடியவர்கள், இப்பொது விமர்சனம் செய்வது சரியா.? என கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும் ஜெய் பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் கடும் எதிப்புக்கு உள்ளாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அப்படி இருக்கையில் இது போன்று சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் படங்களுக்கு தேசிய விருது என்பதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர்கள் நானி, அசோக்செல்வன் உள்ளிட்டப் பலரும் ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கொடுக்காதது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் புஷ்பாவுக்காக அல்லு அர்ஜுனுக்கு விருது கொடுத்ததை ஏற்க முடியாது என தமிழ், மலையாளம், கன்னட சினிமா ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பார்த்த தெலுங்கு சினிமா ரசிகர்களோ, எல்லாம் வயித்தெரிச்சல், வேறும் ஒன்றும் இல்லை என தெலுங்கு ரசிகர்கள் ரவுண்டு கட்டி தேசிய விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறவர்களுக்கு பதிலடி கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.