நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்து, தன்னுடைய நடனத்துக்கு ஏற்ப கதையில் ஹீரோவாக அறிமுகமான பிரபு தேவா தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களில் நடித்து, இயக்குனராகவும் பல படங்களை இயக்கி வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் தனக்கு கதை சொல்ல வந்த இயக்குனர் ஒருவரிடம், தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட உச்சகட்ட அவமானத்தை பற்றி தெரிவித்துள்ள சம்பவம் ஓன்று வெளியாகியுள்ளது.
அதில், பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றிய முதல் படம், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம், இந்த படத்தில் இடம்பெற்ற “பனிவிழும் இரவு” பாடல் தான் பிரபுதேவா சினிமாவில் கோரியகிராப் செய்த முதல் பாடல். இந்த பாடலுக்காக பிரபுதேவாவுக்கு அட்வான்ஸ் தொகை மட்டும் கொடுக்கப்பட்ட நிலையில், மீதி சம்பளம் கொடுக்கப்பட வில்லை, இதனால் தன்னுடைய சம்பளம் பாக்கியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் சென்றுள்ளார் பிரபு தேவா.
இந்த படத்தின் தயாரிப்பாளர் G.வெங்கடேசன் மௌனராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர், குறிப்பாக பெரும்பாலான மணிரத்தினம் படங்களை 80 மற்றும் 90 காலகட்டத்தில் தயாரித்தவர். இவரிடம் தன்னுடைய சம்பள பாக்கியை கேட்க தயங்கி தயங்கி அவருடைய அலுவலகத்துக்கு சென்றுள்ளார் பிரபு தேவா, அங்கே தன்னுடைய தந்தைக்கு நெருக்கமான ஒருவருடம் அந்த தயாரிப்பாளர் பேசி கொண்டிருப்பதை பார்த்து சம்பள பாக்கியை கேட்க வில்லை.
ஆனால் தயாரிப்பாளர் என்ன விஷயம் என பிரபுதேவாவை கேட்க, அதற்கு பரவாயில்லை சார், நீங்க பேசி முடிங்க, சார் போன பிறகு நான் பேசுறேன் என தெரிவிக்க, அதற்கு பரவாயில்லை, உனக்கு என்ன பிரச்சனை, எதற்கு வந்தாய் என சொல்லு என தயாரிப்பாளர் கேட்க, அதற்கு தயங்கி… தயங்கி… சார் என்னுடைய சம்பள பாக்கி இருக்கு, அதை வாங்க வந்தேன் என கேட்க,அதற்கு தயாரிப்பாளர் அலுவலக பையனை அழைத்து இவர் செய்த கோரியகிராப் அடங்கிய அந்த கேனை எடுத்து வர சொல்லிருக்கிறார்.
சிறிது நேரத்தில் அந்த கேன் வந்ததும், பிரபு தேவாவை பார்த்து, இந்தய்யா.. நீ கோரியகிராப் செய்த பாடலின் கேன், எடுத்துட்டு போ, என்னய்யா இது கோரியகிராப், என்ன பாட்டு பண்ணி வெச்சுருக்க, இதுக்கு உனக்கு சம்பளம் ஒரு கேடா, நீயும் வெட்கமே இல்லாமல், நீ செய்த கோரியகிராப்க்கு சம்பளம் கேட்டு வந்துட்ட, இந்த பிடி நீ செய்த கோரியகிராப், நீயே எடுத்துட்டு போ என தயாரிப்பாளர் தெரிவிக்க, அங்கே அலுவலகத்தில் இருந்த மற்றவர்கள் முன்பு பிரபு தேவாவுக்கு மிக பெரிய அவமானமாக இருந்துள்ளது.
இருந்தாலும் மௌனராகம் படத்திற்கு பிரபுதேவா செய்த கோரியகிராப் அடங்கிய கேனை தயாரிப்பாளர் மேஜையில் வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் எதோ ஒரு காரணத்துக்காக மௌன ராகம் படத்தில் பிரபுதேவா கோரியகிராப் செய்த பனிவிழும் இரவு பாடலை இடம்பெற செய்தார் அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம், படம் வெளியான பின்பு இந்த படம் மிக பெரிய ஹிட் மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் கோரியகிராப் பெரிய அளவில் பேசப்பட்டது.
இது பிரபு தேவாவுக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்த படமான அக்னி நட்சத்திரம் படத்தை அதே தயாரிப்பாளர் கி.வெங்கடேஷ் தயாரிக்க, இந்த படத்தில் இடம்பெற்ற “ராஜா ராஜாத்தி ராஜன் எங்க ராஜா” என்கிற பாடலுக்கு கோரியகிராப் பண்ண பிரபு தேவாவை தொடர்பு கொண்டு பேசிய தயாரிப்பாளர், உங்களுடைய சம்பள பாக்கியை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
அக்னி நட்சதிரம் படத்துக்கு ஒரு பாடல் கோரியகிராப் பண்ண வேண்டும் என கேட்க, நீங்கள் என்னை மிகவும் அவமான செய்துள்ளீர்கள், நியாயமாக உங்கள் படத்திற்கு நான் கோரியகிராப் செய்ய கூடாது, இருந்தாலும் உங்கள் படத்தில் மட்டும் நான் வாங்கும் சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகம் கொடுத்தால் கோரியகிராப் செய்கிறேன் என தெரிவிக்க, நான்கு மடங்கு அதிகம் கொடுத்து பிரபு தேவாவை கோரியகிராப் செய்ய வைத்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்றும், இந்த சம்பவத்தை சமீபத்தில் தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனரிடம் பிரபு தேவா தெரிவித்ததாக கூறப்படுகிறது.