பிரபு தேவா பிரேக் அப்… முதல் முதலாக மனம் திறந்த நயன்தாரா..

0
Follow on Google News

நயன்தாரா சமீபத்தில் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தன்னை பற்றி பிறர் பேசுவது, தன்னுடைய கடந்த கால காதல், இதில் குறிப்பாக நயன்தாரா வாழ்க்கையில் பல சிக்கல்களை கொடுத்தது பிரபு தேவா உடன் அவருக்கு இருந்த காதல், ஆனால் அந்த காதல் திருமணம் வரை சென்று நின்றது என்பது ஊரறிந்த விஷயம்.

இந்தநிலையில் இந்த பேட்டியில் திருமணமான பிரபு தேவாவை காதலித்தது பற்றி நயன்தாரா அவருடைய பெயரை குறிப்பிடாமல் பேசுகையில், சினிமா இன்டஸ்ட்ரியில் பலவிதமான உறவுகளைப் பார்த்துள்ளேன். நிறைய இரண்டாம் திருமணங்களை கண்டிருக்கிறேன். நிறைய உறவுகளில் இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களைத் தவறாக கூறவில்லை. அப்படித்தான் இந்த இன்டஸ்ட்ரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படியான உறவுகள் எல்லாம் சரியானது என்று நினைத்தேன் என நயன்தாரா பேசி இருந்தார்.

இது பிரபு தேவா உடனான அவருக்கு இருந்த காதலை தான் இப்படி மறைமுகமாக நயன்தாரா தெரிவித்து இருந்த நிலையில், திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் இருந்த பிரபுதேவாவின் மீது காதலில் விழுந்து, பொது இடங்களுக்கு அவருடன் நயன்தாரா சென்று கொண்டிருந்த காலத்தில் நானும் கல்யாணமான பிரபுதேவாவை லவ் பண்ணுறது தப்பு இல்லன்னு நினைச்சுட்டேன்”” என்பதைத்தான் நயன்தாரா இப்படி நியப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் திருமணமான ஒருவரின் மீது காதல் என்பதும் கூட அன்பின் பரிமாற்றம் தான் ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் ஏற்கனவே ஒருவர் இருக்கிறார் என்பதால் அவரை காயப்படுத்தாமலும் இருக்க வேண்டும். அந்த நேர்மை எதுவும் நயன்தாராவிடம் இருந்தது இல்லை என்பது, அந்த காலகட்டத்தில் நயன்தாராவுக்கு பிரபு தேவா மனைவி ராமலத்திற்கு இடையில் நடந்த சன்டையே சாட்சி. இதனால் நயன்தாரா தன் பக்கம் இருக்கும் தவறை மறைக்க இப்படி உருட்டுகிறார் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில்.

நயன்தாரா தன்ன நல்லவங்களா காட்டணும்னு முடிவு பண்ணிட்டா தன்னோட Exகள point out பண்ணி blame பண்றது easyதான? சமீபத்தில் வந்த நயன்தாரா netflix documentaryல கூட நயன்தாரா past relationship பத்தி பெருசா pointout பண்ணி சொல்லல, இதற்கு காரணம் பழசை கிளரவேண்டாம் என நயன்தாரா கடை பிடித்த நாகரிகம் தான். நயன்தாரா பிரபுதேவாவை லவ் பண்ண டைம்ல நயன்தாரா தமிழ்ல most wanted heroine.

அந்த டைம்ல நயன்தாரா நடிச்ச பெரிய ஸ்டார்ஸ் படங்கள் பல flop ஆணாலும் tamil, teluguல most wanted heroine இருந்தவர். அப்டி பட்ட நயன்தாரா தன்னோட லவ்வர் பிரபு தேவா பேர வெளிப்படையா கைல பச்ச குத்திட்டு நடித்தார். அதுனால பிரபுதேவா கெரியர்ல எதுவும் பாதிப்பு இருந்துச்சானு பாத்த அதுவும் இல்ல.

2011 to 2013 பிரபுதேவா north side direction பண்ண அந்த பக்கம் போய்ட்டு அங்க அடுத்தடுத்து டைரக்சன்ல hit கொடுத்து வேற லெவல் போய்ட்டாரு.. நயன்தாரா அந்த டைம்ல நடிச்சது 2 படம்தான். அதுல ஒன்னு ராமராஜ்யம் அந்த படத்துக்கு கடும் எதிர்ப்பும் இருந்தது. பின்பு நயன்தாரா – பிரபு தேவா பிரிவு, இதற்கு பிறகு ஒரு ப்ரேக்அப் அப்பறம் சம்பந்த பட்டவங்க பிரிஞ்சு போனா கூட என் கெரியர் போனதுக்கு அவன்தான் காரணம்னு சொல்லி நயன்தாரா ஒப்பாரி வைக்காமல்.

‘yes industry ல எல்லாரும் பண்ற மாதிரி நானும் லவ் பண்ணேன்னு’ சொல்றதுக்கே ஒரு தைரியம் வேண்டும் அந்த வகையில் நயன்தாராவை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும் என நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here