சைலன்ட்டா கமல்ஹாசனை சோலியை முடித்த பார்த்திபன்…. என்னடா இது உலகநாயகனுக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

ஒவ்வொரு வாரமும் 4 முதல் 5 படங்கள் திரையரங்கில் வெளியாகும், அப்போது குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித், போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால், சிறு பட்ஜெட் மற்றும் கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி போன்ற அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவது உண்டு. இதற்கு முக்கிய காரணம் திரையரங்க ஒதுக்கீடு, பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே 75 சதவீதத்திற்க்கும் மேல் திரையரங்குகள் ஒதுக்கப்படும்.

அடுத்த நிலையில் உள்ள நடிகர்களுக்கு மீதம் உள்ள 25 சதவீதத்தில் 20 சதவீதம் ஒதுக்கப்பட்டாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே திரையரங்குகள் கிடைக்கும். பெரிய நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால், இந்த சிறு பட்ஜெட் படங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்த செல்ல படுவது போல் காணாமல் போய் விடுவதும் உண்டு.

அப்படி தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்திற்கு முன்னர் தன்னுடைய சிறிய பட்ஜெட் படமான, ‘டீன்ஸ்’ படத்தை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் களமிறக்கி, கதையின் மீது உள்ள நம்பிக்கையால் வெற்றியும் கண்டுள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பல கண்டனங்கள் வந்த போதும் அதையெல்லாம் மீறி தில்லாக ஜூலை 12ஆம் தேதி டீன்ஸ் படத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் பார்த்திபன் இந்தியன் 2 படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்தை வந்து பார்த்தால் கூட எனக்கு போதும் என்று பெருந்தன்மையுடன் பேசி இருந்தார். இந்த நிலையில், இந்தியன் 2 படத்திற்கு first day first show காட்சி முடிந்ததில் இருந்தே நெகடிவ் ரிசல்ட் கிடைத்தது. இதனால் பலரும் குழந்தை நட்சத்திரங்களை வைத்து ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார் என்றும், இரண்டாம் பாதியில் படம் செம திரில்லிங்காக இருக்கிறது என்றும் டீன்ஸ் படத்தை தூக்கி கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் இன்னும் ஓரிரு நாளில் டீன்ஸ் படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கும் என்றும், எதிர்பாராத ஜாக்பாட் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது எனவும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக படம் பற்றிய நல்ல விமர்சனங்கள் வருவதால் எமோஷனலான பார்த்திபன் தனது X தளத்தில், பிரண்ட்ஸ் சத்தியமா சொல்றேன், டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த, உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி, கண் காணா இடத்திற்கு மறைஞ்சே போயிட முடிவு எடுத்தேன்.

ஆனால் இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா கொடுக்கிற பாராட்டில், ஓ..ன்னு சந்தோஷத்துல அழுகிறது உங்களுக்கு கேட்க வாய்ப்பே இல்லை, இது போதாது, இன்னும் ஆதரவு தந்து, பலரும் இந்த படத்தை பார்க்க உதவி செஞ்சு, என்னை சந்தோஷத்தில் சாகடிங்க… மேலும் இப்படத்தை பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு நன்றி என்று ரசிகர்களின் பாதத்தை வணங்குவதாகவும், இந்தப் படத்தின் தூய்மையான வெற்றிக்கு என் நனைந்த இமைகளோடு நன்றி என்றும் கண்கலங்கி உருக்கமாக பார்த்திபன் கூறியிருந்தார்.

மேலும் படம் வெளியாகி மூன்று நாள் கடந்த பிறகும் படத்தை ரசிகர்கள் மிகுந்த அளவு கொண்டாடுவதை பார்த்த பார்த்திபன், Thanks friends, For your unlimited love&support. நான் சற்று உணர்ச்சி வசப்பட்டவன்தான்..
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது. TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு, என் கண்களை கடலாக்கியது. வெளியான முதல் நாள் கூட்டமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை.

எத்தனை screens? எவ்வளவு collections ? என இன்று வரை நான் பார்க்கவேயில்லை, பார்க்கவும் போவதும் இல்லை. எனக்கு இந்த ஆனந்தக் கண்ணீரே போதும். கோடிகளை என் கைகளில் கொட்டினாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை, பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது என சந்தோஷத்தின் உச்சத்தில் பார்த்திபன் கருத்து தெரிவித்திருந்தார்.