நடிகர் நெப்போலியன் ஜெயசுதா தம்பதியினருக்கு இரண்டு மகன்களில் மூத்த மகன் தனுசுக்கு சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோய் இருந்து வந்துள்ளது. அந்த நோயின் சிகிச்சைக்காக தன்னுடைய மகனை அமெரிக்க அழைத்துச் சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். காரணம் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் அவரால் எழுந்து நடக்க முடியாது என்பதால், அவர் மூன்று சக்கர நாற்காலியில் செல்வதற்கான அனைத்து வசதிகளுமே அமெரிக்காவில் இருக்கும்.
பேருந்தில் ஏறுவதற்காக தாழ்வு நிலையில் உள்ள பேருந்து, ஷாப்பிங் செல்வதற்கு அவர்களுக்கு என தனி பாதைம் , அவர்களுக்கு என ரோட்டில் செல்வதற்கான தனி வழி இப்படி அனைத்து வசதிகளும் அமெரிக்காவில் இருந்த காரணத்தினால் தனுசுக்கு அமெரிக்காவிலே இருக்க மிகவும் விருப்பம். அந்த வகையில் தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவிலே செட்டிலான நடிகர் நெப்போலியன் அங்கே சாப்ட்வேர் கம்பெனி மற்றும் விவசாயம் என பெரும் தொழிலதிபராகவே மாறிவிட்டார்.
இந்த நிலையில் தன்னுடைய மகனுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர் நெப்போலியன். அவருடைய மகன் தனுசுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வந்தார். அந்த வகையில் அவருடைய உறவுக்கார பெண்ணான அக்ஷயா என்ற பெண்ணிற்கும் தனுசுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த நிலையில் தசை சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனுஷிற்கு ஜப்பான் செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.
ஆனால் அவரால் விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதால் தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்றுவதற்காக கப்பலில் பல நாட்கள் குடும்பத்துடன் பயணித்த நெப்போலியன், அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்றார். இந்த நிலையில் ஜப்பான் செல்ல வேண்டும் என்கின்ற தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்றுவதற்காகவே ஜப்பானிலே தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தை முடித்து வைத்துள்ளார் நெப்போலியன்.
ஜப்பானில் தடபுடலாக நடந்த திருமணத்தில் பேசிய நடிகர் நெப்போலியன் எவ்வளவோ பெயர் புகழ் சம்பாதித்தாலும், என் மகனின் சூழல் தெரிந்தும் உங்கள் மகனுக்கு எங்கள் மகளை தருகிறோம் என்று சொன்ன பெண்ணின் பெற்றோர்கள் கிரேட் என்று பேசிய நெப்போலியன். அதே போல் என் மகனைப் பற்றி தெரிந்தும் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன என்னுடைய மருமகள் பெரிய தியாகம் செய்கிறார் செய்திருக்கிறார்.
கிராமத்தில் வெளிப்புறத்தில் காவல் தெய்வம் இருக்கும் என்று சொல்வார்கள் அதே போல் தான் இவர்கள் அனைவரும் எங்களுக்கு குலசாமி என பெண்ணின் பெற்றோர் மற்றும் பெண்ணை மேடையில் வைத்து பேசிய நடிகர் நெப்போலியன். அதில் இந்த பெண் என்ற தன்னுடைய மருமகளை காண்பித்து அந்த கோவிலின் மூலஸ்தர் முக்கியமாக சாமி எங்கள் குலதெய்வம் எங்கள் வீட்டுக்கு குத்து விளக்கு ஏற்ற வர குலதெய்வம் தான் இந்த பெண் என்று மனம் உருகி பேசினார் நெப்போலியன்.
இந்த நிலையில் அக்ஷயாவும் தனுசும் மனம் விட்டு திருமணத்திற்கு முன்பு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு தான் இந்த திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும், குறிப்பாக மணப்பெண் அக்ஷயா நெப்போலியன் உறவுக்கார பெண் என்றும் மேலும் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாபெரும் தியாகத்தை செய்த நெப்போலியன் வீட்டிற்கு மருமகளா வந்திருக்கும் பெண் உறவினர்கள் யாரும் ஜப்பானில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
பெண்ணின் தாய் தந்தை மட்டுமே கலந்து கொண்டதாகவும், இதற்கு காரணம் பெண்ணின் உறவினரால் திருமணத்தில் ஏதேனும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவழைக்கப்பட வேண்டாம் பெண்ணின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டதாக சினிமா கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய மனசு செய்து தியாகம் செய்த அந்த பெண்ணின் குடும்பத்தையும் இனி தன் குடும்பம் போல் நெப்போலியன் பார்த்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.