நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் தாங்கி மருத்துவ சிகிச்சை செய்து வருவதால், மகனுக்காக அமெரிக்காவில் டென்னிஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் குடியேறினார் நெப்போலியன். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் சினிமாவில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கியவர் அந்த கம்பெனியில் சுமார் 1500 பேர் வேலை செய்யும் அளவுக்கு தன்னுடைய ஐடி கம்பெனியை வளர்ச்சி அடைய செய்துள்ளார்.
பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக நெப்போலியன் ஐடி கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன். அமெரிக்காவில் ஐடி கம்பெனி மட்டுமின்றி சுமார் பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டிலாகி உள்ள நெப்போலியன்.அவர் சினிமா துறையில் பணியாற்றியபோது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தவர்களுக்கு தற்பொழுது வேலை இல்லை என்றாலும் கூட மாதம் ரூ. 25000 ரூபாய் தொடர்ந்து சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறார் நெப்போலியன். சமீபத்தில் கடந்த வருடம் இவரிடம் வேலை செய்த தொழிலாளரின் பெண்ணின் திருமணத்திற்கு அவர் கேட்காமலேயே பத்து லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நெப்போலியன்.
மேலும் மூத்த மகன் தனுஷ் தசைவளக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் மருத்துவமனை ஓன்று ஏற்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார் நெப்போலியன். இந்த நிலையில் நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டில் ஆக உள்ள நெப்போலியன், கடந்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தை சுமார் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் நெப்போலியன்.
தன் பார்த்து பார்த்து ரசித்து கட்டிய தன்னுடைய வீட்டையும், தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தன்னுடைய அலுவலகத்தையும் கண்ணீர் மல்க நெபோலியன் விற்பனை செய்துள்ளார், இருந்தும் நிரந்தரமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட நெப்போலியன் தமிழ்நாட்டில் தனக்கு சொந்தமான சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று அமெரிக்காவில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படி தன்னுடைய மகன் தனுசுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட நெப்போலியன், மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு சிறந்த தந்தை என நிரூபித்து விட்டார். இருந்தாலும் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பல்வேறு விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அது போன்ற நெகடிவ் விமர்சனங்கள், நடிகர் நெப்போலியன் குடும்பத்தை எந்த அளவு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நெகடிவ் கமெண்ட் செய்கின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நெப்போலியன் ஒரு நடிகர், தொழில் அதிபர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனம் படைத்தவர் என்பது அவர் செய்து வரும் பல சேவைகள் உதாரணம். அப்படி பட்ட ஒரு நல்ல மனிதர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுது அவர்களை வாழ்த்த மனதில்லை என்றாலும் கூட, விமர்சனம் செய்யாமல் கடந்து செல்லலாம், இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.