நடிகர் நெபோலியன் மகன் தனுஷ் – அக்ஷாய இருவருடைய திருமணம் லண்டனில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நெபோலியன் மகன் திருமணம் குறித்து பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வரும் நிலையில், நெபோலியன் மகன் தனுஷ் குறித்து பலரும் அறிந்திராத பல தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன் ஒரு பக்கம் சினிமாவிலும் உச்சத்தில் இருந்தாலும் அரசியலிலும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்த காலம் அது, 2000 ஆண்டு சாப்ட்வேர் கம்பெனியை தொடங்கிய நெப்போலியன் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன்னுடைய சாஃப்ட்வேர் கம்பெனியை தொடங்கினார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற நெப்போலியன்.
மகனுக்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கையில் நெப்போலியன் அடிக்கடி இந்தியா வந்து படத்தில் நடித்துவிட்டு மற்றும் தன்னுடைய அரசியல்களில் ஈடுபட்டு விட்டு இடையிலேயே தன்னுடைய மகனை அமெரிக்காவில் சென்று பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நெப்போலியன் மகன் தனுஷ் தனக்கு இந்தியாவில் இருப்பதைவிட அமெரிக்காவில் இருப்பதே சிறப்பாக இருக்கிறது.
காரணம் அங்கே இந்தியாவில் நான் வீழ்சேரில் சென்றால் அங்கே இருப்பவர்களின் சிலர் பார்வை என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் இங்கே அமெரிக்காவில் இருக்கும் மக்கள் அப்படி என்னை பார்ப்பதில்லை. ஒரு சக மனிதனைப் போன்று தான் பார்க்கிறார்கள், மேலும் பேருந்தில் செல்வதாக இருந்தாலும் சரி, ரயிலில் செல்வதாக இருந்தாலும் சரி, சாலை ஓரத்தில் சென்றாலும் இங்கே அமெரிக்காவில் வீல் சேர் செல்வதற்காக வசதி உண்டு.
ஆனால் இந்தியாவில் அப்படி வசதிகள் இல்லை அதனால் எனக்கு அமெரிக்காவில் இருக்கவே ரொம்ப பிடிக்குது என்று மகன் ஆசையை தந்தை நெப்போலியிடம் தெரிவிக்க, தன்னுடைய மகனுக்காக 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் சொத்துக்களை சொத்துகளை வித்துவிட்டு நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டிலாக தொடங்குகிறார் நடிகர் நெப்போலியன்.மேலும் மகனுக்காக சினிமா, அரசியல் என அனைத்துக்கும் குட் பை சொல்லிவிட்டு நிரந்தரமாக அமெரிக்காவில் மகனுடன் தங்கினார் நெப்போலியன்.
இந்நிலையில், தற்பொழுது நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலி சேர்ந்த ஒரு பொண்ணுக்கும் நிச்சயமாகி ஜப்பானில் திருமணம் நடந்து உள்ளது. குறிப்பாக தன்னுடைய மகனுக்கு என்ன பிரச்சனை உள்ளது என்பதை நெப்போலியன் பல பேட்டியில் வெளிப்படையாகவே பேசி உள்ளார் . அப்படி இருக்கையில் தன் மகனை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தன்னுடைய மருமகளிடம் தன் மகனுக்கு உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தெரிவித்து இருப்பார் நெப்போலியன்.
அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால் பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்வதை பார்க்க முடியாது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நெப்போலியன் மகன் அவருடைய தந்தையிடம் எனக்கு இந்தியாவில் இருப்பதைவிட அமெரிக்காவில் உள்ளது தான் ரொம்ப பிடிக்கிறது, காரணம் இந்தியாவில் உள்ளவர்கள் பார்வை என்னை மிகவும் காயப்படுத்துகிறது.
ஆனால் அமெரிக்காவில் மக்கள் என்னை அப்படி பார்ப்பதில்லை என்று சொன்னதை நிரூபிக்கும் வகையில் இன்று நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் குறித்து பலரும் தவறாக கருத்து தெரிவித்து வருவது நெப்போலியன் மகன் சொன்னது உண்மைதானா.? அந்த கமெண்ட் செய்வர்களின் பார்வையில் தான் தவறு உள்ளது ஆகையால் திருந்த வேண்டியது இவர்கள்தான் என்பதை கமெண்ட் செய்கின்றவர்கள் உணர வேண்டும் என்பதை நிரூபித்து உள்ளது.