தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்த நெப்போலியன் 1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர், ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது.
மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார் நெப்போலியன். இதுதவிர பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயமும் செய்து வருகிறார். மகன் மீது அதீத பாசம் கொண்ட நெப்போலியன், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி அருகே மயோபதி என்கிற ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்டி இருக்கிறார்.
அங்கு தன் மகனை போல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்க மட்டும் இந்தியா வந்து செல்லும் நெப்போலியன், அண்மையில் பிரபல அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து தனது மூத்த மகன் தனுஷின் திருமண அழைப்பிதழை கொடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு, விரைவில் திருமணம் நடக்கமுள்ள நிலையில், நிச்சயதார்த்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட தனுஷின் வருங்கால மனைவியின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இதையடுத்து ஜப்பானின் டோக்கியோவில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பதுதான் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுகிறது. ஒரு சிலர் தனுஷின் திருமணம் செய்யும் அந்த பெண்ணின் வாழ்க்கை அழிந்துவிடும்… பணத்திற்காகத்தான் அந்த பெண் நெப்போலியன் மகனை திருமணம் செய்ய போகிறார் என்றும் கண்டபடி பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் நெப்போலியன் திருநெல்வேலியில் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து பல பேர் அதேபோல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்பியதால் நெப்போலியன் கட்டி பராமரித்து வரும் மயோபதி மருத்துவமனை டாக்டர் டேனியல் என்பவர் சமீபத்தில் youtube சேனலில் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்து பேசுகையில்.
தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களால் திருமணம் செய்து மண வாழ்கையில் ஈடுபட முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் தனுஷை அதிகளவில் பாதிப்பு அடைய செய்யும் வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. தனுஷ் மட்டுமல்லாமல் இதுபோல தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வருத்தத்தை ஏற்படுத்தும்.
அதனால் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாராலும் திருமணம் செய்ய முடியாது என்று ஒட்டுமொத்தமாக கூற முடியாது. நோயின் தாக்கத்தினை பொறுத்து தான் அவர்களால் திருமணம் செய்ய முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும். இந்த நோய் பாதிப்பு அடைந்து 20 வயதில் இறந்தவர்களும் இருக்கிறார்கள், 60 வரை வயது வரைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.