நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் சுமார் 8 வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய தந்தையிடம் வேர்ல்ட் டூர் செல்ல வேண்டும் குறிப்பாக எனக்கு பிடித்த ஜப்பான் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் கடந்த வருடம் நெபோலியன் குடும்பத்தினர் அடுத்த வருடம் நவம்பர் மாதம் ஜப்பான் வேர்ல்ட் டூர் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக நெப்போலியன் மகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் அவர் எந்த ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும் கப்பலில் தான் பயணிக்க முடியும், அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு இந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு பக்கம் நெப்போலியன் மகன் வேர்ல்ட் டூர் பிளான் போட்டுக் இருக்கையில் மறுபக்கம் அவருடைய திருமணமும் கை கூடி வந்திருக்கிறது. ஆனால் இவருடைய திருமணம் ஏற்பாடு என்பது சமீபத்தில் பேசி முடிவு செய்தது இல்லை.
நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்துள்ள அக்ஷயா குடும்பம் மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்சியில் நெப்போலியன் மாமனார் வீட்டின் அருகே இருந்துள்ளார்கள். அப்பொழுது நெப்போலியன் மாமியார் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய பேரன் தனுஷிற்கு பெண் பார்க்கத் தொடங்கியவர் அக்ஷயாவை பேசி முடித்திருக்கிறார். இதன் பின்பு இரண்டு குடும்பமும் பேசி இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளார்கள்.
இதன் பின்பு அமெரிக்காவில் இருந்து தனுஷ் தான் திருமணம் செய்ய இருக்கும் பெண் அக்ஷயா உடன் பேசி இருக்கிறார். அப்போது என்னுடைய பிரச்சனை அனைத்தும் உனக்கு தெரியும், அப்படி இருக்கும் பொழுது உண்மையைச் சொல் உண்மையிலேயே என்னை பிடித்து தான் நீ திருமணம் செய்ய சம்மதிக்கிறாயா என்று தனுஷ் தான் திருமணம் செய்துள்ள அக்ஷயாவிடம் கேட்டிருக்கிறார்.
மேலும் நம்ம இரண்டு குடும்பமும் சொல்கிறார்கள் என்று நீ திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டாம், நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். உனக்கு பிடிக்கவில்லை என்றால், நீ இந்த திருமணத்தை வேண்டாம் என்று தாராளமாக சொல்லலாம். நீ கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தனுஷ் அக்சயாவிடம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு அக்ஷயா உண்மையிலேயே உங்களைப் பற்றி எனக்கு முழுமையாக தெரியும் தெரிந்து தான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று தெரிவித்திருக்கிறார். இதன் பின்பு அக்ஷயாவும் தனுஷும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வந்துள்ளனர். இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் அக்ஷயா தனுஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த நிலையில் திருமணத்தை தமிழ்நாட்டில் நடத்தலாம் என்று முடிவு செய்த நிலையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை நடைபெற்று வருவதால் தனுஷ் கப்பலில் பயணிக்க வேண்டும் என்றால் ஜப்பான் வழியாக சிங்கப்பூர் மாலத்தீவு வந்து, மாலத்தீவில் இருந்து விமானத்தில் வர வேண்டிய சூழல். அதனால் விமானத்தில் தனுஷ் பயணிக்க முடியாது என்பதால்,
ஏற்கனவே ஜப்பான் வேர்ல்ட் டூர் பிளான் நெப்போலியன் குடும்பத்தினர் செய்து வைத்திருந்த நிலையில், ஜப்பானிலேயே திருமணத்தை நடத்தி முடிவு செய்து ஜப்பான் டோக்கியோவில் கோலோகமாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். தன்னுடைய மகனுக்காக நடிப்பு அரசியல் என அனைத்தையும் துறந்து அமெரிக்காவில் செட்டில் ஆகி ஐடி கம்பெனி தொடங்கிய பொழுது,
ஆரம்பத்தில் இவர்களெல்லாம் நடிகர் எங்கே ஐ டி கம்பெனி நடத்தப் போகிறார் என்று பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தில் ஐடி கம்பெனி தொடங்கிய போது சுமார் 400 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கிறார் நெப்போலியன். அதன் பின்பு விடாமுயற்சியில் தற்பொழுது லாபகரமாக வெற்றிகரமாக பல வருடங்களாக ஐடி கம்பெனியை திறன்பட நடத்தி வருகிறார் நெப்போலியன் என்பது குறிப்பிடத்தக்கது.