நெப்போலியன் மகன் தனுஷ் போன்றே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியை சேர்ந்த காந்தி என்பவர் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது தான் கல்லூரி படிக்கும்போது தனக்கு தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு கிடையாது. எனக்கு என்ன வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம் என்றுதான் எல்லோரும் தெரிவித்தார்கள்.
என்னுடைய கல்லூரி காலம் தொடங்கி என் வாழ்க்கை நாளைக்கா.? நாளை மறுநாளா.? என எப்போதோ முடிந்து விடும் என்று சொல்லி தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று 42 வயது வரையும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் எல்லாம் இருந்தாலும், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என கன்னியாகுமரியை சேர்ந்த காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும் இவர் கவிதை புத்தகம் எழுதுவது, நாவல் எழுதுவது அமேசானில் எழுதுவது என ஒரு எழுத்தாளராக வாழ்க்கையை நடத்தி வரும் கன்னியாகுமரியை சேர்ந்த தசை நோயால் பாதிக்கப்பட்ட காந்தி, எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை உள்ளது என்று என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியவர். ஆனால் என்னுடைய வீட்டில் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை.
அதேபோன்று என்னாலையும் ஒரு பெண்ணிடம் அன்பாக நடந்து கொள்ள முடியும், ஒரு பெண்ணை பார்த்துக் கொள்ள முடியும். ஒரு இயல்பான வாழ்க்கையை மற்றவர்கள் போன்று வாழ முடியும் என்று, அதாவது இயல்பான வாழ்க்கை என்றால் இல்லற வாழ்க்கையிலும் என்னால் ஈடுபட முடியும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் எனக்கு இது திருமண ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்று தெரிவித்தவர்.
மேலும் நடிகர் நெப்போலியன் அவர்கள் என்னைப்போன்று தசை நோயால் பாதிக்கப்பட்ட அவருடைய மகன் தனுசுக்கு திருமணம் செய்து கொள்ள நினைத்தது மிக பெரிய அளவில் பாராட்டத்தக்கது என்று தனுஷ் போன்றே தசை நோயால் பாதிக்கப்பட்ட காந்தி என்பவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த உலகத்தில் பலருடைய முன்னுதாரணமாக இருக்கக்கூடிய நபர் நீட் பூஜிசி.
இவருக்கு இரண்டு கை, இரண்டு கால் கிடையாது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கை, கால்கள் இல்லை. அப்படி இருக்கும் பொழுது, எந்த பள்ளியிலும் அவருக்கு அனுமதி இல்லை, ஒரே ஒரு பள்ளியில் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் அவமானம், அசிங்கம். அவரை பார்க்கின்றவர்கள் எல்லாம் கேலி கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
அப்படி அவமானத்தின் மோசமான ஒரு கட்டத்தில் இருக்கும் போது இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தற்கொலைக்கலாம் முயற்சி செய்து இருக்கிறார் நிக். ஒரு கட்டத்தில் அவருடைய தாயிடம் சிறுவயதிலே என்னை கருவில் கலைத்திருக்கலாம் ஏன் என்னை பெற்றெடுத்தாய் நான் எவ்வளவு அவமானப்படுகிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
இப்படி ஒரு சூழலில் இவருக்கு 17 வயது இருக்கும் போது அவருடைய பள்ளி அவருடைய காவலாளி நீ நன்றாக பேசுகிறாய், நீ ஒரு மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆக மாறலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து பேசத் தொடங்கியவர் இன்று உலகம் முழுவதும் சிறந்த பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய 27 வயதில் கேண என்கின்ற பெண்ணை திருமணம் செய்து இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நெபோலியன் மகன் போன்று உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பலரும் பலருக்கும் முன்னுதாரணமாக சாதனை செய்துள்ளது குறிப்பிட்ட தக்கது.