நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜப்பானில் தட புடலாக நடந்து வருகிறது. தன்னுடைய மகன் தனுஷ் ஆசை படியே எப்படி சென்னையில் அவருடைய திருமணம் நடைபெற்றால் சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தடம் புடலாக நடக்குமோ அதேபோன்ற நடக்க வேண்டும் என பணத்தை வாரி கொட்டி தன்னுடைய மகனின் திருமணத்தை வேற லெவலில் நடத்தி வருகிறார் நடிகர் நெப்போலியன்.
குறிப்பாக நடிகர் நெபோலியன் மகன் திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நெபோலியன் மகன் தனுஷ் மற்றும் அவருடைய மருமகள் அக்ஷயா இருவருக்கும் இடையில் மலர்ந்த காதல் பற்றி பல சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் இவர்களின் காதல் பற்றி முழுமையாக புரிந்து கொணடவர்கள் இனி இந்த திருமணம் பற்றி விமர்சனம் செய்தவர்கள் கூட மணமக்களை வாழ்த்த தொடங்கி விடுவார்கள்.
நடிகர் நெப்போலியன் அவருடைய மகன் தனுசுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்த போது, தன்னுடைய மகனின் நிலைமையை முழுவதும் எடுத்து தெரிவித்து, பெண் பார்க்கும் வேலையை தொடங்கினார் நெபோலியன், இதனை தொடர்ந்து நெபோலியன் அவருடைய சமூகத்தைச் சார்ந்த அக்ஷயா என்ற பெண் வரனாக வந்திருக்கிறது. தன்னுடைய மகனுக்கு என்ன பிரச்சனை என்பதை முழுவதும் எடுத்து பெண் வீட்டிற்கு தெரிய படுத்தி இருக்கிறார் நெபோலியன்.
இதன் பின்பு அக்ஷயா மற்றும் தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள், மேலும் வீடியோக்களிலும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்பு தங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அக்ஷயா. குறிப்பாக தன்னுடைய கணவர் தனுஷின் பலம் எது பலவீனம் எது என்று ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி புரிந்து கொண்ட பின்பே இவர்களின் நிச்சயதார்த்தம் மூலக்கரைப்பட்டியில் நடந்திருக்கிறது.
ஆனால் இவர்கள் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு வந்தவர்கள், இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததே கிடையாது. இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் திருமணத்திற்கு இந்தியாவிலிருந்து மணப்பெண் அக்க்ஷயா வரவழைக்கப்பட்டுள்ளார். அக்ஷயாவின் முதல் விமான பயணம் இது என்றும், மேலும் இதற்கு முன்பு அக்ஷயா தொலைபேசியில் அல்லது வீடியோ காலில் தான் தனுஷ் உடன் பேசி இருக்கிறார்.
அவருடைய முதல் சந்திப்பு ஜப்பானில் நடைபெற்று இருக்கிறது. அந்த முதல் சந்திப்பிலேயே நேரடியாக சுமார் 4 மணி நேரம் இருவரும் மனம் விட்டு பல விஷயங்களை பேசி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய காதல் மலர்ந்திருக்கிறது. மேலும் திருமணத்தில் கலகலவென்று நடத்திக் கொண்டிருக்கும் கலா மாஸ்டர் பலரையும் நடனம் ஆட வைத்து கொண்டிருக்கிறார்.
அப்படி மணப்பெண் அக்ஷயாவை நடனமாட அழைத்தபோது எனக்கு ஆடத் தெரியாது என்று மறுத்துவிட்டார் அக்ஷயா. ஆனால் அவருடைய கணவர் தனுஷ் எனக்காக நீ ஆடு என்றதும் உடனே நானும் ஆடுகிறேன் என்று உடனே டான்ஸ் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அக்ஷயா. இதை பார்த்த கலா மாஸ்டர் நாங்க இவ்ளோ பேர் சொல்லியும் நீ வரல ஆனால் உன் கணவர் சொன்னதும் ஓகே சொல்லிட்டியே என்று கேட்டதும்.
அதற்கு என்னுடைய கணவனை சந்தோஷப்படுத்தினால் போதும் என்று அட்சயா பதில் அளிப்பது ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருமண பந்தத்தில் இணையும் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் மகிழ்ச்சியாக வாழ நீங்களும் கமெண்டில் வாழ்தலாமே.