உலகில் அதிகம் மக்கள் தொகை வாழக்கூடிய நகரமான ஜப்பான் டோக்கியோ நகரில் தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார் நடிகர் நெப்போலியன். பொதுவாகவே தன்னுடைய மூத்த மகன் தனுசுக்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்யக்கூடிய நெப்போலியன்.
ஒருமுறை திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மகன் நெப்போலியனுக்கு மகன் தனுசுக்கு மயோபதி சிகிச்சை அளிக்க சென்றபோது அங்கே தங்குவதற்கு வசதி இல்லாமல் ஒரு வீட்டில் தங்கியுள்ளார். அதில் மாடியில் மகன் தங்க வேண்டும். அப்போதே தன்னுடைய மகன் மாடியில் எப்படி ஏறி வர முடியும் என்பதற்காக இரண்டு நாளில் லிப்ட் வசதி செய்தவர் நடிகர் நெப்போலியன்.
அந்த அளவுக்கு தன்னுடைய மகன் கஷ்டப்படாமல் எந்த நேரமும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மகனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் நடிகர் நெப்போலியன். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் மகன் டோக்கியோவில் நடைபெறும் திருமண விழாவிற்கு சவுத் சவுத் இந்தியா உணவுகள் தயாரிக்க இங்கிருந்து தமிழ்நாட்டிலிருந்து கல் உப்பு, பொன்னி அரிச, பெருங்காயம் என அனைத்துமே முன்கூட்டியே சென்றுள்ளது.
அது மட்டும் இல்லாமல் வாழைமரம் முதற்கொண்டு தென்னிந்திய பாரம்பரியப்படியே நெப்போலியன் மகன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தன்னுடைய மகன் திருமணத்திற்கு 300 பேர்கள் வருவார்கள் என்று நெப்போலியன் எதிர்பார்த்த நிலையில் 500 பேர்கள் வந்துள்ளார்கள். இதில் சினிமா துறையைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு வந்த சினிமா நட்சத்திரையைச் சார்ந்தவர்களை திருமணம் முடிந்ததும் அப்படியே அனுப்பி விடாமல், அவர்களுக்கு மூன்று நாட்கள் ஜப்பானில் சுற்றி பார்ப்பதற்கான ஒரு ட்ரிப் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். மேலும் ஜப்பானின் இந்த திருமண நிகழ்வு 13 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கிறது. அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளை நெப்போலியன் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
அதன் பின்பு மணமக்களான தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் ஹனிமூன் எங்கே செல்கிறார்கள் என்ற கேள்விக்கும் தற்பொழுது விடை கிடைத்துள்ளது. அதாவது சுமார் மூன்று மாதங்கள் கப்பலிலே தங்களுடைய ஹனிமூன் ட்ரிப்பை கொண்டாட இருக்கும் தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதியினர் ஜப்பானில் இருந்து பல்வேறு நாடுகளை கப்பலிலே சுற்றி பார்த்து, அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் அமெரிக்கா சென்றடைய இருக்கிறார்கள்.
அந்த வகையில் தங்களுடைய ஹனிமுனை உலகம் முழுவதும் கப்பலில் கொண்டாட இருக்கிறார்கள் தனுஷ் அக்ஷயா தம்பதியினர். இந்த நிலையில் இந்த தம்பதியினரின் திருமணத்திற்கு பலரும் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் ஆக கமெண்ட் செய்து வரும் நிலையில், இதற்கு முன்பே இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துவிட்டார் நெப்போலியன் மகன் தனுஷ்.
அதாவது திருமணத்திற்கு முன்பே தன்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி, நெகடிவ் கமெண்ட் செய்தவர்களுக்கும் நன்றி. மேலும் நான் திருமணம் முடிந்து என்ன சாதிக்கப் போகிறேன் என்கிறார்கள். நான் திருமணம் முடிந்த பின்பு என்னைப் போன்ற பலருக்கு முன்னுதாரணமாக நிச்சயம் சாதித்து காட்டுவேன் என நெப்போலியன் மகன் தனுஷ் பேசியிருப்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.