நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ள நிலையில் அவருடைய மகன் தனுஷ் இருக்கு தற்பொழுது ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் மிகப் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் நடிகர் நெப்போலியன். இந்த நிலையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனுஷை திருமணம் செய்து கொண்டார் அக்ஷயா பணத்திற்காக திருமணம் செய்து கொண்டாரா என்கின்ற பல சர்ச்சைகள் வெடித்தது.
இந்த நிலையில் அக்ஷயா குடும்ப பின்னணி மற்றும் அக்ஷயா குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2003 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அக்ஷயா பிறந்துள்ளார். அவருடைய தாய் தந்தை இருவரும் திருநெல்வேலியில் ஒரு கடையை நடத்தி வந்துள்ளார்கள். இந்த நிலையில் அக்ஷயாவுக்கு சிறு வயதில் வீசிங் ட்ரபுள் போன்ற உடல் ரீதியான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள் அக்ஷயாவுக்காக திருச்சியில் தங்க வேண்டிய சூழல் அவருடைய பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் தங்களுடைய கடைகளை இழுத்து மூடிவிட்டு, மேலும் சொத்துகளை வித்து விட்டு திருச்சியில் நெப்போலியன் மாமனார் பெரியசாமி இருக்கும் தெருவில் குடியேறி உள்ளனர் அக்ஷயா குடும்பத்தினர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக திருச்சிக்கு சென்ற போது அங்கே நெப்போலியன் மாமனார் பெரியசாமி அக்ஷயா குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அக்ஷயாவை சிறுவயதில் இருந்தே தன்னுடைய பேத்தி ஒன்று பார்த்து வந்துள்ளார் நெப்போலியன் மாமனார் பெரியசாமி. இதனை தொடர்ந்து இடையில் 2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போது திருச்சியில் இருந்து தங்களுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றது அக்ஷயாவின் குடும்பம்.
அப்போது நெப்போலியன் மாமனார் பெரியசாமி அக்ஷயா குடும்பத்தினரிடம் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு அக்ஷயவை சம்மதம் பேசியிருக்கிறார்.மூன்று வருடங்களாக நடந்த பேச்சுவார்த்தை கடந்த வருடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் அக்ஷயாவுக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து பின்பு அக்ஷயாவின் பெற்றோர்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு ஏன் உங்க பொண்ணுக்கு இப்படி கல்யாணம் பண்றீங்க.?
பணத்திற்காக திருமணம் செய்கிறீர்களா.? இப்படி பலரும் பலவிதமாக பேச நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்துள்ளனர் அக்ஷயாவின் பெற்றோர்கள். இதனைத் தொடர்ந்து மகள் அக்ஷயா எதுக்குப்பா பயப்படுறீங்க பேசுறவங்க பேசட்டும் என பெற்றோருக்கு மோட்டிவேஷன் கொடுத்து பின்பு தான் அவர்கள் வெளியே தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அக்ஷயாவுக்கு சிறுவயதில் வீசிங் பிரச்சனை இருந்தாலும் கூட, அவருக்கு ஐந்து வயது இருக்கும் போது அந்த பிரச்சனை சரியாகி விட்டது. தற்பொழுது உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் தான் இருக்கிறார் என தகவல் வெளியாகிறது. அந்த வகையில் அக்ஷயா தனுஷ் திருமணம் முழுக்க முழுக்க இது அக்ஷயாவின் தனிப்பட்ட விருப்பம் என்றும் யாரும் அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த திருமணத்தின் போது அக்ஷயா எந்த அளவுக்கு மகிழ்ச்சியா இருந்தது என்று வீடியோவில் பார்க்கும் பொழுதே பலருக்கும் தெரிந்திருக்கும். இது அக்ஷயாவில் முழு விருப்பப்படியே நடந்த திருமணம் என்றும். அந்த வகையில் இந்த திருமணம் குறித்து நெகடிவ் கமண்ட் செய்கின்றவர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்