அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் நடிகர் நெப்போலியன் மகன்… ஐடி கம்பெனி முழுவதும் இவர் கன்ட்ரோல் தான்…

0
Follow on Google News

நெப்போலியன் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் 2009 நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் மற்றும் குனால் என்ற மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் ஏற்பட்டது.

நெப்போலியன் மகன் தனுஷ் சிறுவயதில் இருக்கும் போதே, இவர் 10 வயது வரை தான் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் தெரிவிக்க, தன்னுடைய மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என, திருநெல்வேலி அருகே மயோபதி மருத்துவ சிகிச்சையை மகனுக்கு அளித்து தசைவளக் குறைபாட்டு நோயில் இருந்து ஓரளவு குணப்படுத்தி, நீண்ட நாட்கள் மகன் வாழ்வதற்கு நெபோலியன் ஏற்பாடு செய்தார்.

மயோபதி மருத்துவ சிகிச்சையும் தனுஷின் தசைவளக் குறைபாட்டு நோய்க்கு பலனை கொடுத்தது. மேலும் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் திருநெல்வேலி அருகே மயோபதி மருந்துவமனையை விரிவு படுத்தி, பல வருடங்களாக இவர் நடத்திவரும் மருத்துவமனைக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மகனுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தொழில் தொடங்க திட்டமிட்ட நெப்போலியன், தனது மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்படவும் தனது தொழிலை அமெரிக்காவில் தொடங்கினர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் வரை வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் தன்னுடைய சொத்துக்களை படி படியாக விற்று அமெரிக்காவில் செட்டிலாகி வரும் நெபோலியன், பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் அவருடைய ஐடி நிறுவனத்தில் பனி புரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன்,

சினிமா துறையில் இருந்து தொழிலதிபராக தங்கள் வாழ்க்கையை மாற்றி கொண்டவர்களில். நடிகர் அரவிந்த்சாமி போன்றவர்கள் சொன்றாலும் பின் தொழில் வீழ்ச்சி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வந்தனர்,ஆனால் நடிகர் நெப்போலியன் மிக பெரியவெற்றியை தொழில் துறையில் பெற்று தொழில் அதிபராக வலம் வருகிறார், மேலும் தசைவளக் குறைபாட்டு நோயால் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நெபோலியன் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் அனிமேஷன் படித்து முடித்துள்ளார்.

மேலும் தந்தை நெபோலியன் ஐடி நிறுவனத்தை தனுஷ் தான் தற்பொழுது கவனித்து வருகிறார், என்றும், தொழில் தொடர்பாக பல தொழில் அதிபர்களை சந்தித்து பேசுவது என சுமார் 1500 பேர் வேலை செய்யும் ஐடி கம்பெனியை திறமையாக கையாண்டு வருகிறார் நெப்போலியன் மகன் தனுஷ். இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய மகன் தனுஷ்க்கு தமிழ்நாட்டில் , திருநெல்வேலி பக்கத்தில் உறவினர் பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நெப்போலியன், சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு நீங்களும் கமெண்டில் வாழ்த்து சொல்லலாமே.