அடி மேல் அடிவாங்கிய நடிகர் நாகார்ஜுனா.. சமந்தா பாவம் சும்மா விடுமா.?

0
Follow on Google News

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா தான், தென்னிந்திய திரை உலகின் நம்பர்.1 பணக்கார நடிகராக இருக்கிறார். இவர் ஹைதராபாத்தில் 45 கோடி மதிப்புள்ள பிரமிக்க வைக்கும் பங்களா கட்டி, அங்கு தான் வசித்தும் வருகிறார். அதோடு இவரிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமும் இருக்கிறது. மேலும் இவர் 3010 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.

இந்நிலையில்தான் இவ்வளவு கோடியில் சொத்து குவித்த வைத்திருந்தாலும், நாகார்ஜுனா குளத்தை ஆக்கிரமித்து, பிரம்மாண்ட அரங்கை கட்டி வைத்திருக்கிறார் என, நடிகர் என்று கூட பாரபட்சம் பார்க்காமல் தெலுங்கானா அரசு அவரின் கட்டிடத்தை அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் எப்படி மழை பெய்தால் ஒரே நாளில் வெள்ளம் வந்துவிடுகிறதோ, தெலுங்கானாவிலும் அப்படிதான் ஒரே நாளில் வெள்ளம் வந்துவிடுகிறது. அதனால், நீர்நிலைகள், குளம் மற்றும் அரசு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை தெலங்கானா அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 44 ஆண்டுகளாக ஹைதராபாத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளின் விபரங்களை செயற்கைக் கோள் வாயிலாக அறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அப்படிதான்
மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா குளத்தின் பகுதியை பிரபல நடிகர் நாகார்ஜுனா ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் உடனே இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை பார்த்த பலரும் நடிகர் என்றும் பாராமல், அவர் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய இடத்தை தெலுங்கானா அரசு இடித்ததை பாராட்டி வருகின்றனர்.

இருப்பினும் நடிகர் நாகார்ஜுனா, N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது.

மேலும் அந்த கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன். நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை, ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம் என தெரிவித்துள்ளார்.