70, 80 காலகட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசனுக்கு இணையாக பெண் ரசிகர்களை கொண்டவர் நடிகர் மைக் மோகன். ஒரே நேரத்தில் அவர் நடிப்பில் சுமார் மூன்று படங்கள் கூட வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்று அன்றைய காலகட்டத்தில் இருந்த நடிகர் ரஜினி கமல் போன்ற நடிகர்களையே பின்னுக்குத் தள்ளி உச்சத்தில் கொடி கட்டி பறந்தவர் மைக் மோகன். ஆனால் திடீரென்று அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனதற்கு காரணம் அவர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது தான் என கூறப்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஒருவர் நடிகர் மைக் மோகனை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய காதலை நேரடியாகவே மோகனிடம் தெரிவித்துள்ளார். அப்போது சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் வளர்ந்து கொண்டிருந்த மைக் மோகன். அந்த முன்னணி நடிகையின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.
இருந்தும் தொடர்ந்து நடிகர் மைக் மோகனை சுற்றி சுற்றி வந்த அந்த முன்னணி நடிகையிடம் ஒரு கட்டத்தில் உன்னை நான் காதலிக்க முடியாது என கரார் என தெரிவித்து விடுகிறார் மைக் மோகன். இதன் பின்பு மை மோகனை சினிமாவில் இருந்து காலி செய்வதற்காக மைக் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டுள்ளார் அந்த நடிகை.
ஒரு நடிகையே மை மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக பரப்பி விட்டது, பலரும் நம்பும்படியாக அமைந்துவிட்டது. அதனால் இந்த தகவல் காற்று தீ போன்று வைரலானது. இதனால் மைக் மோகன் இமேஜ் பெரும் அளவு டேமேஜ் செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் மிக கொடூரமான நோய் என்பது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்ட காலம் அது.
மேலும் எய்ட்ஸ் ஒரு மிகப்பெரிய கொடிய நோய் என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்த காலகட்டத்தில் மைக் மோகன் எய்ட்ஸ் என செய்தி மக்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்திலும் பரவியது அவருடைய இமேஜை டேமேஜ் செய்தது. திட்டமிட்டு மைக் மோகனை காலி செய்வதற்காக அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக பரப்பப்பட்ட இந்த செய்தி தான் மைக் மோகனின் சினிமா வாழ்க்கையவே முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது உள்ள சமூக வலைதளம் மற்றும் யூடியூப் சேனல் போன்று அந்த காலகட்டத்தில் கிடையாது. அப்படி இருக்கையில் நஅன்றைய புலனாய்வு பத்திரிக்கைகள் மோகனை வலை வீசி தேடுகிறார்கள். அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக செய்தி வெளியானது குறித்து அவரை தொடர்பு கொண்டு அவரிடம் பேட்டி எடுப்பதற்காக புலனாய்வு பத்திரிகைகள் வலை வீசி தேடுகிறார்கள்.
ஆனால் தன்னை பற்றி இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மைக் மோகன் சென்னையில் இல்லை, சில காலம் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத அளவுக்கு வாழ்ந்து வந்துள்ளார் மைக் மோகன். பொதுவாக ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டால் அது மிகப் பெரிய அளவில் அந்த நடிகரின் இமேஜ் பாதிக்கப்படாது .
ஆனால் அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் மோகனைத் திட்டமிட்டு சினிமாவிலிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காகவே, மைக் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக செய்தியை பரப்பி விட்டு சூழ்ச்சியில் நடிகர் மோகன் சினிமாவில் இருந்து வீழ்த்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் , எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூட பொய்யான செய்திகளை பரப்பி விட்டார்கள் என அவரே கூட தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.