நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் காமெடி நடிகர் மயில்சாமி. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த மயில்சாமி. சினிமாவில் நுழைந்து சுமார் 15 வருட கடுமையான போராட்டத்திற்கு பின்பு 2000 வருடங்களுக்கு பின்பு தான் பிரபலமாக அறியப்பட்டவர் மயில்சாமி.
சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய மயில்சாமி, பொது நல அக்கறை அதிகம் உள்ளவர், மேலும் சினிமா துறையில் இருக்கும் டாப் நடிகர்கள் வரை துணை நடிகர்கள் வரை அனைவரிடமும் நட்புடன் பழக கூடிய மயில்சாமியை பிடிக்காத நபர்கள் சினிமா துறையில் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரிடமும் பண்பாக பழக்கூடியவர் மயில்சாமி.
தன்னிடம் உதவி கேட்டு வருகின்றவர்களுக்கு, தன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் கூட, சினிமா துறையை சேர்ந்த மற்றவர்கள் மூலம் உதவி செய்து வரக்கூடியவர் மயில்சாமி, அந்த வகையில் மயில்சாமியால் உதவி பெற்றவர்கள் ஏறலாம், மேலும் அஜித் உட்பட பல டாப் நடிகர்கள் மூலம் பலருக்கு உதவி செய்துள்ளார் மயில்சாமி.
மிக தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்று மேல கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார், அந்த நிகழ்வில் ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் வாசிக்க அருகில் உற்சகமாக மயில் சாமி அவர் வாழ்வில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி அது தான். சிவராத்திரி அன்றே மாரடைப்பு காரணமாக மரணம் அடைத்தார் மயில்சாமி.
சிவராத்திரி நிகழ்வில் ட்ரம்ஸ் சிவமணியிடம் இந்த அபூர்வமான சிவனுக்கு ரஜினி சார் கையால் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்று மயில்சாமி தெரிவித்ததாக ட்ரம்ஸ் சிவமணி தெரிவித்தார். அந்த வகையில் மயில்சாமியின் அந்த கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
மேலும் மயில்சாமி மறைந்த போது பெங்களூரில் அண்ணனின் 80வது சதாபிஷேகம் நிகழ்ச்சியில் இருந்த ரஜினிகாந்த், மயில்சாமி இறந்த செய்தி கேள்விப்பட்டு, உடனே சென்னை வந்து நேரில் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த். இப்படி சினிமா துறையினரே மிக பெரிய சோகத்தில் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கையில், பிப் 20ம் தேதி மயில்சாமி உடல் அவருடைய வீட்டில் இருந்து எடுத்து செல்ல பட்டது.
அப்போது மயில்சாமி வீடு அருகில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்துள்ளார், இருந்தும் சில நிமிடங்கள் செலவு செய்து மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை கமல்ஹாசன். மயில்சாமி இறந்த 19ம் தேதி சில காரணகளால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கிடையாது என முக்கூட்டியே பட குழுவுக்கு தெரிவித்து இருந்தார் ஷங்கர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லை என்பதால், கமல்ஹாசன் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார் என பலரும் எதிர்பார்க்க, கிடைத்த அந்த கேப்பில் ஈரோடு இடைதேர்தல் பிரச்சாரத்து சென்று விட்டார் கமல்ஹாசன். மயில்சாமி வீட்டில் இருந்து வரும் மீன் குழம்பை கமல்ஹாசன் ருசித்த சாப்பிடும் அளவுக்கு மயில்சாமி – கமல்ஹாசன் இருவருக்கும் நெருக்கமாக உறவு உண்டு, அந்த வகையில் சக கலைஞன் மரணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த கூட மனமில்லாத கமல்ஹாசனுக்கு மனிதாபிமான கொஞ்சம் கூட இல்லையா என சினிமா துறையினர் வருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.