இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரை படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த சக்சஸ் பார்ட்டியில், உதயநிதி ஸ்டாலின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் மாரி செல்வராஜ் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் எட்டு கோடியோ 80 லட்சம் என சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே முதல் நாள் ஓப்பனிகில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் மாமன்னன் என கூறப்படுகிறது. ஆனால் இரண்டாம் நாள் மாமன்னனின் வசூல் தலைகீழாக மாறியது.
முதல் நாள் வசூலுக்கும் இரண்டாம் நாள் வசூலுக்கும் ஏணி வைத்து எட்டாவது அளவுக்கு இரண்டாம் நாள் வசூல் மிக பெரிய சரிவை சந்தித்து உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்து இருந்ததால் அவர் சார்ந்த கட்சியினர், மாமன்னன் படம் வெளியான திரையரங்குகளில் குவிந்தனர், பல திரையரங்குகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த திமுக முக்கிய புள்ளிகள் மொத்த டிக்கெட்டையும் புக் செய்து கட்சி தொண்டர்களுக்கு இலவசமாக கொடுத்து மாமன்னன் படத்தை பார்க்க வைத்துள்ளனர்.
அந்த வகையில் முதல் நாள் பெரும்பாலும் உதயநிதி சார்ந்த கட்சி நிர்வாகிகள் திரையரங்குகளில் படையெடுக்க தொடங்கியதின் விளைவுதான் முதல் நாள் வசூல் மிக பெரிய தொகையை பெற்றது என கூறப்படுகிறது.மேலும் ஒரு படம் பொது மக்கள் மத்தியில் ரீச் ஆனால் மட்டுமே அந்த படம் ஓடும் திரையரங்குகளில் அடுத்தடுத்த நாட்கள் படம் பார்க்க பொதுவான ரசிகர்கள் படையெடுப்பார்கள்.
ஆனால் முதல் நாள் பொது கூட்டத்திற்கு வருவது போன்று உதயநிதி ஸ்டாலின் கட்சியை சார்ந்தவர்கள் படையெடுத்து திரையரங்குக்கு வந்ததின் காரணமாக முதல் நாள் வசூல் அதிகரித்தது, ஆனால் இரண்டாம் நாள் தொடங்கி பல திரையரங்குகளில் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கி கொண்டிருக்கிறது மாமன்னன்.
குறிப்பாக மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதின் விளைவாக, தென் மாவட்டங்களில் மாமன்னன் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் பெரும்பாலனோர் மாமன்னன் படத்தை புறக்கணித்த விளைவாக தென் மாவட்டங்களில் மாமன்னன் ரிலீசான திரையரங்குங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இன்னும் சில திரையரங்குகளில் வெறும் 5 நபர்கள் 6 நபர்கள் என சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மாமன்னன் திரைப்படத்தை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மாமன்னன் படம் மிக பெரிய பின்னடைவை இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.