மறைந்த எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்டு அலைந்த போது, அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் பரிதவித்து வந்த நிலையில், சென்னையில் ஒரு உணவகத்தில் வேலை செய்து கொண்டே சினிமாவில் உதவி இயக்குனராக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. தேனி மாவட்டத்தைச் சார்ந்த நடிகர் மாரிமுத்து அதே மாவட்டத்தைச் சார்ந்த கவிஞர் வைரமுத்துவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்போது வைரமுத்து ஒரு சில கட்டுரைகளை மாரிமுத்துவை எழுத சொல்லுகிறார், மாரிமுத்துவின் கைஎழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்ட வைரமுத்து தன்னுடைய உதவியாளராக மாரிமுத்துவை தன் அருகில் வைத்துக் கொள்கிறார், இருந்தாலும் மாரிமுத்துவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி எதிர்காலத்தில் சினிமாவில் பெரும் இயக்குனராக வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருந்தது.
அந்த வகையில் மாரிமுத்துவின் லட்சிய கனவை நிறைவேற்று வகையில் வைரமுத்து சிபாரிசில் அப்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த நடிகர் ராஜ்கிரனின் அலுவலகத்தில் உதவியாளராக சேர்கிறார் மாரிமுத்து. அங்கே ராஜ்கிரன் நடிக்கும் படங்களில் உதவி இயக்குனராகவும் , அலுவலகத்தில் உதவியாளராகவும் இருந்து கொண்டே சினிமா இயக்குனர் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து.
இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகமான ரோஜா படம் மிகப்பெரிய ஹிட் அடிக்குது, அப்போது ராஜ்கிரன் அலுவலகத்தில் மற்ற நபர்களிடம் ஏ ஆர் ரகுமான் குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் மாரிமுத்து, அதாவது சின்னப் பையன் தான் செமையா மியூசிக் போட்டு இருக்கிறார், இனி இவரை அடிச்சுக்க ஆளே இல்லை என்று புகழ்ந்து தள்ளுகிறார் மாரிமுத்து.
இந்நிலையில் அந்த அலுவலகத்தில் மாரிமுத்துவுக்கு பிடிக்காத சிலர் உடனே ராஜ்கிரனிடம் சென்று சார் உங்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே இசைஞானி இளையராஜாவை மிக இழிவாக பேசுகிறார் மாரிமுத்து என்று சொன்னதும் ராஜ்கிரனுக்கு கடும் கோபம் மாரிமுத்து மீது ஏற்படுகிறது. இதற்கு காரணம் தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரனை நீ நடியா நான் உனக்கு இசையமைக்கிறேன் என்று நடிகராக ஊக்கம் கொடுத்து சினிமாவில் ராஜ்கிரனை தள்ளிவிட்டது இசைஞானி இளையராஜா.
மேலும் தொடர்ந்து ராஜ்கிரன் நடிக்கும் படங்களும் அவர் தயாரிக்கும் படங்களும் இசைஞானி இளையராஜா என்கின்ற டைட்டிலுக்காகவே பல நாள் ஓடி பெரும் லாபத்தை ராஜ்கிரனுக்கு சம்பாதித்து கொடுத்தது. அந்த வகையில் இளையராஜா மீது பெரும் மதிப்பும் மரியாதையும் ராஜ்கிரனுக்கு உண்டு. இந்த நிலையில் கடும் கோபத்துடன் மாரிமுத்து விடம் சென்று என் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே இசைஞானி இளையராஜாவை நீ இழிவாக பேசுகிறாயா.?
உனக்கு இங்கே இடமில்லை வெளியே போ என்று மாரிமுத்துவை வெளியில் அனுப்பி விடுகிறார் ராஜ்கீரன், இருந்தும் எவ்வளவோ ராஜ்கிரனை சமாதனம் செய்ய மாரிமுத்து முயற்சித்தும் இளையராஜா மீது இருந்த மதிப்பு மரியாதையும் காது கொடுத்து கூட மாரிமுத்து என்ன சொல்கிறார் என கேட்க ராஜ்கிரனுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜ்கிரன் அலுவலகத்தை விட்டு வெளியேறிய மாரிமுத்து, தொடர்ந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்கிறார் மாரிமுத்து. இந்த சூழலில் சில நாட்கள் கடந்து அதே ராஜ்கிரன் அலுவலகத்தில் வேலை செய்த மற்றவர்கள் ராஜ்கிரனிடம், சார் மாரிமுத்து இளையராஜா சாரா தவறாக பேசவில்லை, அவர் ஏ ஆர் ரகுமானைத்தான் பெருமையாக பேசினார் உங்களிடம் தவறாக போட்டு விட்டார்கள் என்று சொன்னதும்,
உடனே மனம் உருகிய ராஜ்கிரன் மாரிமுத்துவை நேரில் அழைத்து பேசி சமாதானம் ஆகியுள்ளார். அப்போது மாரிமுத்துவிடம் எதும் மனசுல வெச்சுகாத என்று ராஜ்கிரண் சொன்னது, அதெல்லாம் ஒண்ணுமில்லை சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான என தெரிவித்துளளார் மாரிமுத்து. அப்போது மாரிமுத்துவிடும் ராஜ்கிரன் நீ விமானத்தில் சென்று இருக்கிறாயா என்று கேட்டுள்ளார் அதற்கு மாரிமுத்து இல்லை நான் சென்னையில் மீனம்பாக்கத்தில் வெளியே நின்று விமானத்தை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் எங்கே விமானத்தில் பயணம் செய்வது என்று சொன்னதும், உடனே ராஜ்கிரன் அவருக்கு ஒரு விமான டிக்கெட்டை புக் செய்து முதல் முதலில் மாரிமுத்துவை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்தது ராஜ்கிரண் என்றும் கூறப்படுகிறது.