நடிகர் மாரிமுத்துவுக்கு ஏற்கனவே இதய நோய் பிரச்சனை இருந்துள்ளது, அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் யாருக்கும் தெரியாதபடி பார்த்து கொண்டு வந்துள்ளார் மாரிமுத்து, சுமார் 30 வருடம் கடும் போராட்டத்திற்கு பின்பு அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கிடைத்த பேர் புகழ், அதனால் கிடைத்து வந்த வருமானம் மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்தாலும், இதை தக்க வைக்கவும், மேலும் பேர், புகழ், பணத்தை அடைய தனக்கு கிடைக்கும் அணைத்து வாய்ப்புகளையும் வேண்டாம் என மறுக்கமால் ஒத்து கொண்டு வந்துள்ளார்.
தனக்கு இதய நோய் இருப்பதை பெரிதாக பொருட்படுத்தாமல், படம், விளம்பரம், திறப்பு விழா, நிகழ்ச்சிகள், சீரியல் என எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு மாரிமுத்து வேலை செய்து வந்துள்ளார். அவர் மரணம் அடையும் அன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசி கொண்டிருக்கையில், அவருடன் சக நடிகர் கமலேஷ் இருந்துள்ளார், ஆனால் அவருக்கும் மாரிமுத்துவுக்கு இதய நோய் இருப்பது தெரியாது.
இந்நிலையில் மாரிமுத்துவுக்கு உடல் வியர்த்துள்ளது, தன்னுடைய உடல் பிரச்சனை குறித்து சக நடிகர் கமலேஷ்விடம் எதுவுமே தெரிவிக்காமல் அவரே காரை ஓட்டிட்டு மருத்துவமனை சென்றுள்ளார். தனியார் மருத்துவமனைக்கு காரை ஓட்டி வந்த மாரிமுத்துவால் காரில் இருந்து இறங்க முடடியவில்லை என கூறப்படுகிறது, அப்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த மாரிமுத்துவை மருத்துவமனை ஊழியர்கள் இறக்க முயன்ற போது மாரிமுத்து உடல் முழுவதும் வியர்த்து இருந்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் மாரிமுத்துவை காரில் இருந்து இறக்க முயற்சித்தபோது நெஞ்சை பிடித்து கொண்டு ஊழியர் மீது சாய்ந்துள்ளார் மாரிமுத்து. உடனே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்துவுக்கு ஃபல்ஸ் மிகவும் மோசமாக இருந்துள்ளது, மேலும் அவருக்கு சுவாசமும் மிக கிரிட்டிகளான சூழ்நிலையில் இருந்துள்ளது. உடனே அவசர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் மருத்துவர்கள்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள், மஜாஜ், வென்டிலேஷன் என அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ மருத்துவர்கள் போராடியும் இறுதியில் பிபி, பல்ஸ் இரண்டையும் மருத்துவர்களால் மீட்க முடியவில்லை.மேலும் தொடர்ந்து 4 முறை மாரிமுத்துவுக்கு ஷாக் கொடுத்தும் மருத்துவர்கள் முயற்சித்துப் பார்த்தும் பிபி, பல்ஸ் இரண்டையும் மருத்துவர்களால் மீட்க முடியவில்லை, தொடர்ந்து வாயில் நுரை வரவும் செய்துள்ளது.
ஒரு கட்டத்தில் மாரிமுத்து வாயில் அதிக நுரை வர தொடங்கியதாக, குறிப்பாக ஒருவரின் இதயம் செயலிழக்கும் போதும் அப்படி தான் அவர்களும் வாயில் நுரை அதிகமாக வரும் என்றும் மருத்துவர்கள் தெரிகிறார்கள். கடுமையாக போராடியும் மருத்துவர்களால் மாரிமுத்துவுக்கு வெற்றிகரமாக சிகிச்சையை மருத்துவர்களால் முடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாரிமுத்துவுக்கு ஏற்கனவே இதயத்தில் இரு ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் நிலையில்.
இது தொடர்பாக மாத்திரையும் சாப்பிட்டு வந்துளளர். அதுமட்டுமின்றி, அவருக்கு சர்க்கரை நோயும் இருந்து வந்தாலும், தன்னுடைய டயட்டில் கவனமாக தான் இருந்து வந்துள்ளார். இருந்தாலும் அதிக ஸ்டைன் இருக்கும் போது ஹார்ட் அட்டாக் வரும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், அப்படி தான் மரிமுத்துவுக்கு வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் மாரிமுத்து ஸ்டூடியோவில் டப்பிங் பேசி கொண்டிருந்த போதே அவருக்கு உடல் நிலை சரியில்லை என உணர்ந்து அவரே காரை ஒட்டி செல்லாமல், அருகில் இருந்தவர்கள் உதவியை கேட்டிருக்க வேண்டும், அப்படி கேட்டிருந்தால் இன்று மாரிமுத்துவின் உயிர் காப்பாற்ற பட்டிருக்கலாம், காரணம் ஏற்கனவே உடல் பிரச்சனையால் அவதிப்பட்டு மருத்துவனைக்கு சென்று கொண்டிருந்த மாரிமுத்து காரை ஓட்டி சென்றதால் மேலும் அவருக்கு அழுத்தம் தான் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.