நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான பச்சை குதிரை என்கின்ற படத்தில் பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்து வந்தவர் இயக்குனர் ஹெச்.வினோத், பொதுவாக கேகே நகரில் உள்ள ஒரு டீ ஸ்டாலின் வழக்கம்போல் பல இயக்குனர்கள் அங்கே சந்திப்பார்கள். அந்த வகையில் ஹெச்.வினோத் மற்றும் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் போன்றோர் அடிக்கடி அந்த டீ ஸ்டாலில் சந்தித்துள்ளார்கள்.
அப்படி தினந்தொறும் டி கடைக்கு வந்து அங்கே வரும் சினிமா துறையினர் மூலம் பட வாய்ப்புகள் தேடி வந்தார் உதவி இயக்குனராக இருந்த ஹெச்.வினோத். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலையும் செய்து வந்துள்ளார். அப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கோழி சோடா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது.
ஏற்கனவே கே கே நகர் டி ஸ்டாலில் அடிக்கடி நடந்த இயக்குனர்கள் சந்திப்பின் போது, விஜய் மில்டன் உடன் ஹெச்.வினோத்க்கு நட்பு ஏற்பட்டுள்ளது, அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த கோலி சோட படப்பிடிப்பின் போது விஜய் மில்டனிடம் ஒரு கதை சொல்கிறார் எச் வினோத். உடனே விஜய் மில்டன், லிங்கு சாமியிடம் அழைத்து சென்று அங்கே ஹெச்.வினோத்தை அந்த கதையை சொல்ல வைக்கிறார்.
ஆனால் லிங்குசாமி பொருளாதார சூழ்நிலை காரணமாக இப்போதைக்கு என்னால் இந்த படம் பன்ன முடியாது என தெரிவித்து விடுகிறார். அப்போது மனோபாலா கவனத்திற்கு ஒரு கதை வைத்து ஒரு இயக்குனர் சுற்றி கொண்டு இருப்பதாக ஒரு தகவல் செல்கிறது. உடனே மனோபாலா, யார் அந்த இயக்குனர் உடனே வரச் சொல்லுங்கள் என தெரிவிக்கிறார்.
இதன் பின்பு மனோபாலாவை நேரில் சந்தித்து புதிய படத்திற்கான கதையை தெரிவிக்கிறார் ஹெச்.வினோத். கதை மிகவும் பிடித்து போக மனோபாலா நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் ஒரு பட்ஜெட் சொல்லுப்பா என ஹெச்.வினோத்திடம் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை தெரிவித்து, இந்த தொகைக்குள் படத்தை முடித்து விடலாம் என ஹெச்.வினோத் மனோபாலாவுக்கு உறுதியளித்துள்ளார்.
உடனே ஓகே செய்த மனோபாலா அந்த படத்தை தயாரிக்கிறார். அப்படி தயாரான படம் தான் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான சதுரங்க வேட்டை. ஒரு இயக்குனராக இருந்து ஹெச்.வினோத் சொன்ன கதை மேல் கொண்ட ஈர்ப்பினால், மேலும் ஹெச்.வினோத் கதை சொல்லும் விதத்தைப் பார்த்து இவர் நிச்சயம் சினிமாவில் வெற்றி பெறுவார் என்கின்ற உறுதியுடன் தான் அவருக்கு சதுரங்க வேட்டை படத்தை தயாரித்து சினிமாவில் அடையாளம் காட்டியவர் மனோபாலா.
ஹெச்.வினோத் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டை மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஓன்று, யாருய்யா இந்த இயக்குனர் என தமிழ் சினிமா துறையினரை நிமிர்ந்து பார்க்கும் வகையில் அமைத்தது , அந்த படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித் நடிப்பில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார் ஹெச் வினோத்.
இதில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் நேரடியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்துடன் மோதி மிக பெரிய வெற்றியை பெற்றது, இப்படி அஜித் ஒரு வெற்றியை அஜித்துக்கு கொடுத்த இயக்குனர் ஹெச்.வினோத்தை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் மனோபாலா என்பது குறிப்பிட்டத்தக்கது.