நடிகர் கமலஹாசனின் சிபாரிசின் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சென்ற மனோபாலா ஆகாய கங்கை என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமையாமல் பல நடிகர்களிடம் கால் சீட் கேட்டு அழைத்தவர். மீண்டும் உதவி கேட்டு கமல்ஹாசனிடம் சென்று அவரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என போராடி கொண்டிருக்கிறார் மனோபாலா.
நிச்சயம் மீண்டும் தனக்கு பட வாய்ப்பை கிடைக்கும், தன்னுடைய திறமையை நிரூபித்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி மனபாலாவுக்கு இருந்தது. இப்போது விஜய், அஜித் போன்று 80 காலகட்டத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் மைக் மோகன், எதார்த்தமாக மோகன் – மனோபாலா சந்திப்பு நடைபெறுகிறது, பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மனோபாலா இருந்த போதே மோகன் உடன் நெருக்கி பழகி வந்துள்ளார் மனோபாலா.
அந்த வகையில், மனோபாலா கடும் சிரமத்தில் இருப்பதை அறிந்த மைக் மோகன் மனோபாலாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அதற்கு மனோபாலா எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் எனக்கு கால் சீட் கொடு, என்னுடைய திறமையை நிரூபித்து காட்டுகிறேன் என தெரிவிக்க, அப்போது பிசி நடிகரான மைக் மோகன், இப்போதைக்கு கால் சீட் இல்லையே, இருந்தாலும் செக் பன்றேன் என சொன்னவர்.
16 நாள் தான் கால் சீட் உள்ளது அந்த 16 நாட்கள்குள் எப்படியா.? உன்னால படம் எடுக்க முடியும் என மைக் மோகன் தெரிவிக்க, எனக்கு 12 நாட்கள் உங்கள் கால் சீட் போதும் என என உடனே அருமையான கதையை தயார் செய்து மைக் மோகன் நடிப்பில் மனோபாலா இயக்கிய படம் தான் பிள்ளை நிலா. த்ரில்லர் மூவியான இந்த படத்தில், ராதிகா, ஜெய்சங்கர், நளினி மற்றும் பேபி ஷாலினி ஆகியோர் நடிப்பில் படத்தை எடுத்து முடித்துவிட்டார் மனோபாலா.
இந்த படத்தை எடுத்து முடித்து இளையராஜாவை தன்னுடைய படத்திற்கு இசை அமைக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மனோபாலா. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் இசைஞானி இளையராஜா, அவருடைய டேட் கிடைத்தாலே போதும் அந்த படத்திற்கான ப்ரொடியூசர் கிடைத்த மாதிரி இருந்த நிலையில் இளையராஜா வீட்டிலிருந்து கிளம்பி வரும்போது,கோடம்பாக்கதில் உள்ள பாலத்தில் மெதுவாக வருவார்.
அந்த பாலத்தின் அருகில் பல இயக்குனர்கள் இளையராஜா கடைக்கண் பார்வை படுவதற்காக அங்கே நின்று கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு நாள் இளையராஜா வரும்பொழுது அங்கே இளையராஜாவின் கடைக்கண் பார்வை தன் மீது படுவதற்காக இயக்குனர் மனோபாலா நின்று கொண்டு உள்ளார். இதை பார்த்த இளையராஜா உடனே தன்னுடைய உதவியாளரிடம் அங்கே நிற்பது பாரதிராஜாவின் உதவி இயக்குனர் தானே என கேட்டுள்ளார்.
அதற்கு உதவி இயக்குனர் ஆமாம் சார் என்றதும், என்னையா இங்கே நின்று கொண்டிருக்கிறார் உடனே வரச் சொல் என்று இளையராஜா மனோ பாலாவை அழைத்து வர சொல்லி இருக்கிறார். அதன் பின்பு இளையராஜா இருக்கும் அறை உள்ளே மனோபாலா வந்தவுடன் இளையராஜா கண்டபடி திட்டியுள்ளார். எதுக்குயா இந்த மாதிரி நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை எனக்கு தெரியாதா.? நேரடியாக வந்து என்னை பார்க்க வேண்டியது தானே என்று இளையராஜா கோபத்தில் திட்டியுள்ளார்.
அதற்கு மனோபாலா வழக்கம்போல் நகைச்சுவையாக சாமியின் வரவேண்டும் என்றால் நின்று கொண்டு தானே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உடனே சிரித்துக்கொண்ட இளையராஜா, என்னையா என்று கேட்டுள்ளார். அதற்கு மனோபாலா நான் ஒரு படம் பண்ணி இருக்கேன் முதல் படம் படுதோல்வியடைந்து விட்டது, இரண்டாவது ஒரு படம் பண்ணியிருக்கிறேன் அந்த படத்திற்கு நீங்க தான் இசை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உடனே அந்த படத்தை இளையராஜாவுக்கு போட்டு காண்பித்துள்ளார் மனோபாலா, படத்தை பார்த்த இளையராஜா மனோபாலாவை பாராட்டிய பிரம்மாதமாக இருக்கு என பாராட்டியவர்.பின்னனி இசையில் வேற லெவல் நான் பார்த்துக்கிறேன், நீ போ என்று அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனோபாலா இயக்கத்தில் வெளியான பிள்ளை நிலா படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்து மனோபாலாவுக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.