தேடி வந்த ரஜினியை புறக்கணித்த லோகேஷ் கனகராஜ்…. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் எப்போதும் ஓடுகின்ற குதிரையில் சவாரி செய்கின்றவர், அந்த வகையில் தற்போது சினிமா என்னும் பந்தயத்தில் முதல் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்த ரஜினிகாந்த், நம்ம ஒரு படம் பண்ணலாம் ஒரு கதை ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்துள்ளார், அதாவது லோகேஷ் கனகராஜ் தற்பொழுது அவர் இயக்கம் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்வதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து லியோ படத்தை முடித்த பின்பு, நம்ம இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டுள்ளார்.

அதற்கு லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு, கைதி 2, அதை முடித்துவிட்டு கமல் சார் உடன் ஒரு படம் என தனக்கு அடுத்தடுத்து கமிட் மென்ட் இருப்பதால் இப்போதைக்கு நம்ம சேர்ந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை என ரஜினியிடம் நேரடியாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லியோ முடித்துவிட்டு அந்த படத்தை தான் தொடங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் பரவாயில்லை, நான் கமல்ஹாசனிடம் பேசிக் கொள்கிறேன்.நான் உங்களுடன் இணைந்து பண்ண போகும் படம் தான் நான் சினிமாவில் நடிக்க இருக்கும் கடைசி படம் என மிக உருக்கமாக பேசிய ரஜினிகாந்த், என்னுடைய கடைசி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதால் உங்களை அழைத்து பேசுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜை கன்வின்ஸ் செய்ய முயன்ற ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்க 30 கோடி சம்பளம் என மிக பெரிய தொகையை தெரிவித்துள்ளார் ரஜினி. அதற்கு லோகேஷ் கனகராஜ் யோசித்து சொல்கிறேன் என எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் விடைபெற்றுள்ளார் லோகேஷ்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் மிக நெருக்கமான நட்பில் இருக்கக்கூடியவர் அனிருத். அந்த வகையில் தன்னுடைய உறவினரான அனிருத்தை நேரில் அழைத்த ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜை அழைத்து அடுத்த படம் பண்ணுவது குறித்து பேசியதை தெரிவித்து தெரிவித்த ரஜினி, ஆனால் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு உறுதியான தகவல் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

அதனால் நீங்கள் தானே லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நட்பில் இருக்கக்கூடிய நபர், பேசி ஒரு முடிவு பண்ணுங்க என ரஜினிகாந்த் தன்னுடைய உறவினரான அனிருத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யிடம் அனிருத் பேசி கன்வின்ஸ் செய்து ரஜினி படத்தில் கமிட் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார் அனிருத்.

அதன் அடிப்படையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் சந்திப்பின் நடந்துள்ளது, அப்போது அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து கொடுத்தாலும் ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் வாய்ப்பை புறக்கணித்து லோகேஷ் கண்ணராஜ் பின்பு அனிருத் கன்வின்ஸ்னால் இந்த படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.