சின்ன பையன் விஜய்… அவர் கூட நான் எப்படி நடிக்க முடியும்… விஜய்யை அசிக்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்..

0
Follow on Google News

இந்தியாவில் எத்தனை உலக அழகிகள் வந்தாலும், உலக அழகி என்றால் உடனே அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். எனக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு, வேண்டும், டேய் ஐஸ்வர்யா ராய் உலக அழகி உன் ஆள் உள்ளூர் கிழவி, இந்த மூஞ்சிக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு வேண்டுமா.? இப்படி சினிமாவில் ஐஸ்வர்யா ராய் குறித்து பல காட்சிகள் ஐஸ்வர்யா ராய் இளமையாக இருந்த காலத்தில் இடம் பெற்று அது ரசிகர்களின் கைதட்டலும் பெற்றது.

உலக அழகியாக பட்டம் பெற்ற ஐஸ்வர்யா முதல் முதலில் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் தான் சினிமாவுக்கு அறிமுகமானார், இதற்கு காரணம், அப்போது இயக்குனர் மணிரத்தினம் இந்தியா அளவில் மிக பெரிய இயக்குனராக இருந்தார். குறிப்பாக ஷாருக்கான் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய உயிரே படம் மிக பெரிய ஹிட் அடித்து பேன் இந்தியா இயக்குனராக மணிரத்தினம் இருந்த காலம் அது.

இதனாலே மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யாராய். அதன் பின்பு தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், இந்தி சினிமாவில் டாப் நடிகையானார், இதில் ஜீன்ஸ் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் தன்னுடன் நடித்த நடிகர்களில் மிக பிடித்தமான நடிகர்களில் பிரசாந்தை சேர்த்து கொண்டார்.

தமிழில் பல முன்னணி நடிகர்கள் ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க போட்டி போட்டாலும் கூட, ஐஸ்வர்யா தமிழில் கமிட்டாக வில்லை. ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா உடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கூட ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிந்து தான் எந்திரன் படத்தின் மூலம் நிறைவேறியது, அதே போன்று தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கம் என்றால் ஐஸ்வர்யா ராய் தயங்காமல் கமிட்டாகி விடுவார்.

இதற்கு காரணம், ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதும் முதல் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தது மணிரத்தினம் என்பதால் என்பதற்காக மட்டுமில்லை, மணிரத்தினம் இயக்கும் படம் பேன் இந்தியா படம் என்பதாலும் தான், அதனால் தான் தமிழில் ராவணன், பொன்னியின் செல்வன், குரு போன்ற மணிரத்தினம் இயக்கும் படங்களில் ஐஸ்வர்யா தயங்காமல் கமிட்டாகி நடித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தமிழ் நடித்த ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டே ஆகிய படங்களில் நடித்த காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராய் விஜய் உடன் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஐஸ்வர்யா ராய் விஜய் உடன் நான் நடித்தால் என்னை விட விஜய் சின்ன பையனாக ஸ்க்ரீனில் தெரிவார் என காரணத்தையும் தன்னுடன் விஜய் நடிக்கும் தமிழன் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் உலக அழகியாக பட்டம் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ராவை அணுகியது விஜய் நடிக்க இருந்த தமிழன் படக்குழு.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்ற பின்பு தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமாவில்மிக பெரிய உச்சத்திற்கு வந்தது போன்று தமிழில் அறிமுகனால் சென்டிமெண்டாக மிக பெரிய உயரத்திற்கு வரலாம் என விஜய் நடிக்கும் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காமிட்டனர் உலக அழகி பிரியங்கா சோப்ரா, ஆனால் பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படமே தோல்வியை தழுவினாலும், ஹிந்தி, ஹாலிவுட் என மிக பெரிய அளவில் சினிமாவில் உச்சத்தை தொட்டவர் பிரியங்கா சோப்ரா.