பலத்த அடி வாங்கிய கார்த்திக்… தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் நஷ்டம்….

0
Follow on Google News

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜுமுருகன். அடிப்படையில் இவர் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். முதல் படத்திலேயே இரண்டு பார்வை மாற்று திறனாளிகளுக்குள் இருக்கும் காதலை அழகாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்தார். அதனையடுத்து இவர் இயக்கிய ஜோக்கர் படமும் மெகா ஹிட்டானது. தொடர்ந்து ஜீவாவை வைத்து இயக்கிய ஜிப்ஸி அடி வாங்கியது. இந்த சூழலில் இவர் நான்காவது படமாக கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கியிருக்கிறார்.

இது கார்த்திக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் மற்றும் பாவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கு முறையே ரவி வர்மன் மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் செய்து உள்ளனர். ஜப்பான் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் இசை. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது.

தீபாவளிக்கு வந்த நான்கு படங்களிலேயே இந்தப் படத்தின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தங்கக கொள்ளையனைச் சுற்றியுள்ள புதிரான கதைக்களத்தைக் கொண்ட இந்தத் திரைப்படம், கணிசமான சலசலப்பை உருவாக்கியது. ஆரம்ப பரபரப்பு இருந்தபோதிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்தது. மேலும் இப்படமானது கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உடன் வெளியிடப்பட்டது.

இப்படமோ நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ஜப்பான் படத்தை விஞ்சியது மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாம்பியனாக உருவெடுத்தது. ஜப்பான் திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே திரையரங்குகள் திரையிடுவதில் சரிவுடன், நடிகர் கார்த்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவான படம் என்ற பெயரை பெற்று இருக்கிறது. படத்தைக் காண்பிக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், படம் விரைவில் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தொடங்கி உள்ளது.

ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கார்த்தி சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ஷேர் கிடைத்ததாம். அதனால் ஜப்பான் படத்துக்கு 20 கோடி ஷேராவது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தியேட்டர்காரர்களுக்கு 5 கோடி கிடைப்பதே கஷ்டம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் 15 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது இப்படம். அதுமட்டுமின்றி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையும் இன்னும் விற்கப்படவில்லையாம். ரிலீசுக்கு முன்னர் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை 15 கோடியாக நிர்ணயம் செய்திருந்தாராம் தயாரிப்பாளர். அந்த தொகைக்கு யாரும் வாங்க முன்வராததால், ரிலீசுக்கு பின்னர் படம் வெற்றியடைந்தால் அதைவிட பெரும் தொகைக்கு விற்றுவிடலாம் என்கிற ஐடியாவில் இருந்தாராம்.

ஆனால் படத்தில் ரிசல்ட் அப்படியே உல்டா ஆனதால் தற்போது சாட்டிலைட் உரிமையை விற்க முடியாமல் திண்டாடி வருகிறாராம். இதனால் இதன் மூலமும் ஒரு 15 கோடி என மொத்தம் 30 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் கார்த்தியின் மார்க்கெட் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று இருக்கிறது.

மேலும் இதற்கு முன்னதாக கார்த்தியின் கேரியரில் பிளாப் படம் எடுத்துக் கொண்டால் அது தேவ். ஏனென்றால் கார்த்தியின் படங்கள் ஓரளவு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் லாபத்தை பெற்று கொடுத்துவிடும். இப்போது ஜப்பான் படம் 30 கோடி நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. கார்த்தி படத்திற்கு இப்படி ஒரு நிலைமை என்று இப்போது கோலிவுட் சினிமாவே ஆச்சரியப்படும் அளவுக்கு ஜப்பான் மோசமான அடி வாங்கி இருக்கிறது. இதை ஈடுகட்ட கைதி 2 மூலம் கார்த்தி தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.