சோழர் சாம்ராஜ்யத்தின் கதையை சொல்லும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் பிரமோஷனில் நிகழ்ச்சிகளில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவை முதலில் இயக்குனர் மணிரத்தினம் தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடத்துவதாக திட்டமிட்டு இருந்தார். ஆனால் தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒரு சர்ச்சை கூறிய கருத்து ஒன்று நிலவி வருகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்த அமைச்சர்கள் பலர் தங்களுடைய பதவியை இழந்துள்ளார்கள்.
அதனால் தான், ஒரு முறை முதல்வராக இருந்த கருணாநிதி கூட தஞ்சை பெரிய கோவிலுக்கு முன் வாசல் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்றார் என்கின்ற ஒரு தகவலும் பரவலாக பரவி கிடைக்கிறது. இதனால் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டால், தனக்கு எதாவது ஆபத்து நேரிடும் என அச்சத்தில் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், சென்னையில் நடந்தால் தான் பங்கேற்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாக செய்திகளும் வந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நடக்கும் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
அதன் அடிப்படையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரம் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் தஞ்சை வருகிறேன்.!எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்படம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா.? குந்தவை உடன் வருகிறாயா.? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே.? அப்படியே அந்த அருள் மொழியையும் இழுத்து வா.! என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அருள்மொழிவர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, அவருடைய டிவீட்டர் பக்கத்தில், தம்பி உடையான் படைக்கு அஞ்சான், இதோ நானும் வந்தியத்தவனுடன் வந்துவிடுகிறேன், என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அப்படத்தில் வந்தியதேவனாக நடிக்கும் நடிகர் கார்த்திக் கலந்து கொள்ள மாட்டார் என்கின்ற தகவல் வெளியாகிறது.
இதற்கு காரணம், தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் அவர்களுக்கு செல்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்கின்ற ஒரு மூடநம்பிக்கையை பின்பற்றிய இதற்கு முன்பு ரஜினிகாந்த் தஞ்சை பெரிய கோவிலை புறக்கணித்தது போன்று, நடிகர் கார்த்திக்கும் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க காரணம் என கூறப்படுகிறது.