நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. அப்போது மெட்ராஸ் ஒரு ஜாதி படமா என்று செய்தியாளர் ஒருவர் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் கார்த்தி அளித்த விளக்கம் இணையத்தில் காட்டுதீ போல் பரவி வந்ததது. மெட்ராஸ் சாதி படமா என்கிற கேள்விக்கு பதிலளித்த கார்த்திக். சென்னையில் பிறந்து வளர்ந்த பசங்க யாருக்குமே ஜாதி தெரியாது. நான் ஜாதியை பார்த்ததில்லை” என்றெல்லாம் பேசியிருந்தார்.
அதாவது கார்த்திக் பேசுகையில், நான் மெட்ராஸில் வளர்ந்தவன். எனக்கு ஜாதி எல்லாம் தெரியாது. அப்படி வளர்ந்தவன் நான். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்கு ஜாதி எல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் கேட்போம். அவ்வளவுதான் அதை தாண்டி ஜாதி பற்றி எல்லாம் பேசிக் கொள்ள மாட்டோம். தான் நடித்த மெட்ராஸ் எனக்கு ஜாதி படமாக தெரியவில்லை” என்று கார்த்திக் பேசியிருந்தார்.
ஒரு பக்கம் ஜாதி பற்றி கார்த்தி பேசிய வீடியோ வைரலாகிக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் இதற்கு முன்பு பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதாவது கார்த்திக் திருமணத்திற்கு முன்பு சிவகுமார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார், அப்போது கார்த்திக் உடன் இருந்துள்ளார், நடிகர் கார்த்திக்கை பார்த்து ஜெயலலிதா அட்வைஸ் செய்துள்ளார்.
அதாவது சூர்யா தான் காதல் திருமணம் செய்து பெற்றோரை கஷ்டப்படுத்தினார். நீயாவது பெற்றோருக்கு பிடிச்ச மாதிரி உங்க ஜாதியில இருக்க பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்று கார்த்தியிடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கூறியதாக மேடையில் பெருமையாகப் சிவகுமார் பேசும் வீடியோவும் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிவக்குமாரின் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன், “எனக்கு ஜாதி தெரியாது ” என்று கூறிய கார்த்தி ஏன் தன்னுடைய ஜாதியை சேர்ந்த பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும். கேமராவுக்கு முன் ஜாதியே தெரியாது, ஜாதியே பார்க்கல என்று வெட்டி பெருமை பேசுவது சமுதாயத்திற்காக போடுற வேஷம் என்று கார்த்தியை விளாசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பருத்தி வீரனின் ஐடி டீம் தீவிரமாக செயல்பட்டு சிவக்குமார் பேசிய இந்த வீடியோவிற்கு காப்பி ரைட் புகாரை கொடுத்து வீடியோவை முடக்கியுள்ளதாகக் கூறிய ப்ளூ சட்டை மாறன் அந்த வீடியோ லிங்க்கை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தினசரி எந்த சினிமா பிரபலம் சிக்குவார்கள் அவர்களை வறுத்தெடுக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் ப்ளூ சட்டை மாறன்.
சமீப காலமாக ரஜினி, விஜய் இருவரையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார் கார்த்திக். நான் சென்னைக்காரன். சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் ஜாதி பார்ப்பதில்லை ஜப்பான் ப்ரெஸ்மீட்டில் கார்த்தி பேசியுள்ளதற்கு அப்படியென்றால் மற்ற அனைத்து ஊரை சேர்ந்தவர்களும் ஜாதி பார்க்கிறார்களா? சென்னைக்காரர்கள் யாருமே ஜாதி பார்ப்பது இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ள ப்ளூ சட்டை மாறன்.
மேலும் Vegetarians only என்று சென்னையில் வாடகைக்கு விடப்போகும் வீடுகளில் போர்ட் தொங்குவதை இவர் பார்த்ததே இல்லையா? என்று தெரிவித்தவர் ரஞ்சித் இயக்கத்தில் நான் நடித்த ‘மெட்ராஸ்’ ஜாதிப்படமில்லை – பட்டப்பகலில் பொய் சொன்ன கார்த்தி என்று தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் கார்த்திக் மற்றும் சிவகுமார் குடும்பதை விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.