இயக்குனர் – கார்த்திக் இடையில் மோதல்… பொன்னியின் செல்வன் படத்தின் வசூலுக்கு உதயநிதி வெச்ச ஆப்பு..

0
Follow on Google News

நடிகர் கார்த்திக் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வர தயாராக இருக்கும் படம் சர்தார். இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. சர்தார் படத்தின் வெளிநாடு உரிமையை பெற்ற விநியோகஸ்தர்களுக்கு இந்த படத்தின் கண்டன்ட் இதுவரை செல்லவில்லை. பொதுவாக வெளிநாடு உரிமை பெற்ற விநியோகஸ்தர்களுக்கு அவர்கள் வாங்கி அந்த படத்தின் கன்டென்ட் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அவர்கள் கைகளுக்கு சென்று இருக்க வேண்டும்.

அப்படி சென்றால் தான் அங்கே, அவர்கள் நாட்டின் உள்ள சென்சாருக்கு இந்த படம் அனுப்பப்பட்டு, அதன் பின்பு திரையில் வெளியிடப்படும். ஆனால் தற்பொழுது வரை சர்தார் படத்தின் கண்டன்டு அந்தப் படத்தை வெளிநாடு உரிமை பெற்ற விநியோகஸ்தர்களுக்கு செல்லவில்லை. இதனால் கடும் விரக்தியில் உள்ளனர் படத்தை வெளிநாடு உரிமை பெற்ற விநியோகஸ்தர்கள். இதற்கு முக்கிய காரணம் சர்தார் படத்தின் இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர் கார்த்திக்கும் இடையில் நடந்த மோதல் தான் என்று கூறப்படுகிறது.

சர்தார் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அந்தப் படத்தின் இயக்குனர் மித்ரன் மற்றும் கார்த்திக் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த உரசல் ஒரு கட்டத்தில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட வேலையான டப்பிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது, இயக்குனருக்கும் கார்த்திக்கும் மோதல் கடுமையாக வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து இயக்குனர் வந்தால் நான் டப்பிங் பேசமாட்டேன் என்ற கார்த்திக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் உதவி இயக்குனர்கள் மூலம் கார்த்திக் சர்தார் படத்தின் டப்பிங் பேசி வந்துள்ளார். ஆனால் கார்த்திக் பேசி முடித்த டப்பிங் இயக்குனர் பார்த்த பின்பு அடிக்கடி உதவி இயக்குனர்கள் மூலம் டப்பிங் மாற்றச் சொல்லியுள்ளார். இதனால் சுமார் அதிக நாட்கள் டப்பிங் மட்டுமே நடைபெற்று உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் டப்பிங் பேசப்பட்ட படம் சர்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் மற்றும் இயக்குனர் இடையே மோதல் இருந்து வந்தாலும். சர்தார் படத்தை பார்த்த பின்பு, படம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என, அந்த படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இந்நிலையில் சர்தார் படத்தில் தமிழ்நாடு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் கடந்த மாத இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் தொடர்ந்து பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடும் பொழுது முதல் வாரம் தயாரிப்பாளருக்கு 75% திரையரங்கு உரிமையாளர்களுக்கு 25% கிடைக்கும், அடுத்த அடுத்த வாரங்களில் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த சதவீத பங்கு மட்டுமே போதும், அதே நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்குகள் அதிகமாக செல்லும்.

அந்த வகையில் நான்காவது வரம் பொன்னியின் செல்வன் ஓட இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள் 60 சதவிகிதம் பங்கு, மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவிகித பங்கு கிடைக்கும். இதனால் தீபாவளி பண்டிகையின் போதும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து திரையிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தயாராக இருப்பதால் சர்தார் படத்தை வாங்குவதற்கு சில திரையரங்குகள் முன் வரவில்லை.

ஆனால் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தரப்பில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதால் பொன்னியின் செல்வன் படத்தை தூக்கி விட்டு, சர்தார் படத்தை வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர். இதனால் பொன்னியின் செல்வன் வசூலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆப்பு வைத்துவிட்டார் உதயநிதி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒன்றரை மாதத்தில் முடிவுக்கு வந்தது ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை… இருவருக்கும் உச்சகட்ட சண்டை.