லியோ படத்தில் விஜயை தூக்கி சாப்பிடும் கமலின் நடிப்பு… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் லோகேஷ்..

0
Follow on Google News

ஆங்கில திரைப்படத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கின்ற படத்தின் கதையை தழுவி லியோ படம் எடுத்து வருவதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது லியோ படத்தில் நடிகர் விஜய் மட்டுமில்லாமல் சஞ்சய்தத், அர்ஜுன் போன்ற மிக பெரிய நடிகர்கள் லியோ படத்தின் உள்ளே வந்ததின் காரணமாக இது ஒரு பேன் இந்தியா படமாகவே மாறி உள்ளது.

மேலும் லியோ என்கின்ற ஒரு டைட்டிலே ஹாலிவுட் படத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளதால், இந்த படத்தை ஆங்கிலத்திலேயும் வெளியிடுவதற்கான திட்டம் பட குழுவினருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தி ஹிஸ்டரி ஆஃ வைலன்ஸ் கதையை தழுவி பல ஆங்கிலத்திழும் பிற மொழிகளிலும் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும். லோகேஷ் கனகராஜின் படைப்பு சற்று வித்தியாசமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக காஷ்மீரில் லோகேஷ் கனகராஜ் எடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சிகளும் மிகப்பெரிய பாராட்டை பெரும் என்றும் அந்த வகையில் ஹாலிவுட் தரத்திற்கு லியோ படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம்,

இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோக்ஸ் கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் வந்து கலக்கி எடுத்து இருப்பார். அதேபோன்று தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிகர் சூர்யா சில காட்சிகள், விக்ரம் படத்தில் வந்து கலக்கியது போன்று லியோ படத்திலும் கலக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இது குறித்து விசாரித்ததில் நடிகர் சூர்யா லியோ படத்தில் என்ட்ரி கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என உறுதியான தகவல் தெரிகிறது.

அதே நேரத்தில் தற்பொழுது நடிகர் கமலஹாசன் சினிமாவில் நடிப்பதை விட படம் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன் அடுத்ததாக தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்து படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று தமிழ் சினிமாவில் அதிக படம் தயாரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது விக்ரம் படத்தின் வெற்றிதான்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு விக்ரம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைத்து கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என கமல்ஹாசன் விரும்புகிறார். அதே நேரத்தில் கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் விஜயும் இணைந்தால் அந்த படம் எந்த அளவுக்கு வெற்றியைப் பெறும் என்பது கமலஹாசன் நன்கு அறிந்தவர்.

அந்த வகையில் நடிகர் விஜயின் கால் சீட்டுக்காக, மேலும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கம்பெனியில் ஒரு படம் இயக்குவதற்காகவும் லியோ படத்தில் கமலஹாசன் சில காட்சிகள் வந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடித்த காட்சிகளை எப்படி ரகசியமாக படமாக்கப்பட்டு கடைசி நேரம் வரை வெளியில் கசிய விடாமல் பார்த்துக் கொண்டார்களோ, அதே போன்று நடிகர் கமலஹாசன் நடிக்க இருக்கும் காட்சிகளை மிக ரகசியமாக படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் லியோ படத்தின் கமல்ஹாசன் இருக்கிறாரா.? இல்லையா என்பது படம் வெளியான பின்பு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.