உண்மையில் விக்ரம் படம் நல்லாவா இருக்கு… பிரபல இயக்குனர் விமர்சனம்..!

0
Follow on Google News

தமிழில் தொடர்ந்து வெளியான பிரமாண்டமான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவும் போது மனம் சொல்லவொணாக் கவலைக்குள் மூழ்கியது. விக்ரமின் வெற்றி ஒருவித ஆசுவாசத்தை தருகிறது. என வெயில், அங்காடி தெரு போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். விக்ரம் படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள வசந்த பாலன், மேலும் தெரிவித்ததாவது.

ஒரு திருவிழாவில் நாம் கலந்து கொள்ளும் போது நம்மையறியாமல் நமக்குள் தொற்றிக் கொள்ளும் உற்சாகமும், கொண்டாட்ட மனநிலையும் இன்று விக்ரம் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த போது என்னையறியாமல் தொற்றிக் கொண்டது. நான்கு வருடமாக அரசியல், பிக்பாஸ் என திரையிலிருந்து விலகிப்போன கமலை ( கமல் சாரை ) மீண்டும் திரையில் அசாத்திய கதாநாயகன் கதாபாத்திரத்தில் பார்க்கும் போது கமலின் ஒரு சிறு தலை சிலுப்பலில் திரையரங்கம் உற்சாகம் கொள்கிறது.

we want actor Kamal Haasan என்று ஓங்காரமிட தோன்றுகிறது. எவ்வித கெட்டப்பும் இன்றி கமல் அவர்கள் சின்ன திரைத் துணுக்கில் கூட திரையை மொத்தமாக ஆக்ரமித்து நான் உலக நாயகன் என சொல்கிறார். விஜய்சேதுபதி என்ட்ரி, கமல் என்ட்ரி, சூர்யா என்ட்ரி, இன்டெர்வல் சிசென், கிளைமாக்ஸ் முன்பு, கிளைமஸ் பின்பு என பல்வேறு தருணங்கள் திரையரங்கை அதிரச் செய்தது.

இருளில் நடக்கும் நிழல் உலக மனிதர்களின் நடமாட்டம் அவர்களின் தேவைகள், அவர்களின் கனவு, போராட்டம், அடிதடி சண்டை என நம்மை ஒரு நிமிடம் கூட சோர்ந்து விடாமல் லோகேஷ் தன் உலகிற்கு இழுத்து செல்கிறார். நான்கு படங்கள் தொடர் வெற்றிகள் என்பது பெரும் சாதனை சவாலும் கூட .லோகேஷ் சவாலை தன் சாமர்த்தியத்தால், அணுகுமுறையால், திரை ஆக்கத்தால் மிக எளியதாக கடக்கிறார்.தொடர் வெற்றிகள் சாத்தியமாக என் மனமார்ந்த வாழ்த்துகள்.

படத்தை மொத்தமும் கட்டிப்போடுவது அனிருத்தின் ராட்சச இசை. விக்ரம் திரைப்படத்தின் நிறைகுறைகளை, படத்தைப் பற்றிய பலவேறு நுண்ணிய விமர்சனங்களை இணையம் எங்கும் பார்க்கிறேன். நான் பார்ப்பது இவைகள் அத்தனையையும் தாண்டி இரண்டு வாரங்கள் விக்ரம் பற்றிய தொடர் உரையாடல்கள், செய்திகள், வீடியோக்கள் என ஒரு திரைப்படம் மனிதனை ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியான மனநிலைக்கு தள்ளியிருக்கிறது.

பொழுது போக்கு கலையின் முக்கிய பங்கை இந்த படம் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது என்றே தோன்றுகிறது. விக்ரம் படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என விக்ரம் படம் குறித்து பிரபல இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?