கமல்ஹாசன் படம் வெளியாவதில் சிக்கல்.. சும்மா விடுவாரா உதயநிதி.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமலஹாசன் நடிப்பில் ஜெயலலிதா ஆட்சியில் வெளியான விஸ்வரூபம் படம் மிக பெரிய சிக்கலை சந்தித்தது, அதே போன்ற ஒரு சிக்கலை கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படம் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவி விலைக்கு கேட்ட போது. பணம் பரிமாற்றத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதால் விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவிக்கு விற்பனை செய்யவில்லை கமல்ஹாசன்.

இதனால் கோபம் அடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சில இஸ்லாமிய இயக்கங்களை தூண்டி விட்டு, விஸ்வரூபம் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்து, விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக தடையாக இருந்தார் என்று கூறப்பட்டது. விஸ்வரூபம் படத்தை ஜெயா டிவிக்கு விற்பனை செய்யவில்லை என்பதால் சிக்கலை சந்தித்த கமல்ஹாசன். தற்பொழுது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் சொந்தமான ரெட் ஜெயின் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது.

இந்த படத்தின் பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல என்கிற பாடல் ஓன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே என்று ஒரு வரி மத்திய அரசை விமர்சனம் செய்வது போன்று அமைத்துள்ளது, ஆனால் மற்ற பெரும்பாலான வரிகள் மாநில அரசை விமர்சனம் செய்வது போன்று அமைத்துள்ளது கடும் சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது. இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளில்.

சாவி இப்போ திருடன் கைல…. ஏரி குளம் நதிய கூட, பிளாட்டு போட்டு வித்தாக்க…. நாறி போடும் ஊரு சனம், சின்ன மழை வந்தாக்க போன்ற வரிகள் மாநில அரசை விமர்சனம் செய்வது போன்று அமைத்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் திமுக அரசை விமர்சனம் செய்து எடுக்கப்பட்ட ஒரு பாடல் இடம் பெற்றுள்ள ஒரு படத்தை. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்ட இருக்கிறார்.

இதற்கு முன்பு சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் வாரிசு அரசியல் குறித்து இடம் பெற்ற கட்சியை ஆளும் திமுக தரப்பில் இருந்து நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் வெளியான சமீபத்திய பாடலில் அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளதால். விக்ரம் படம் அரசியல் சார்ந்த படமா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. ஒரே நேரத்தில் மத்திய பாஜக மற்றும் மாநில திமுக இரண்டு அரசையும் பாடல் வரிகளில் விமர்சனம் செய்துள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் இந்த படம் சென்சாரில் போது, படத்தில் மத்திய அரசை அவதூறாக விமர்சனம் செய்திருந்தால் அதை நீக்க வலியுறுத்த படுவார்கள் என்றும், மேலும் திமுக அரசை விமர்சனம் செய்த பாடல் இடம்பெற்ற விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட கூடாது என திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ள நிலையில் விக்ரம் படம் புதிய சிக்கலில் மாட்ட தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

கீர்த்தி சுரேசையும் விட்டு வைக்காத விக்னேஷ் சிவன்..! நயன்தாரா அதிரடி