நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்து வருகின்றவர். அந்த வகையில் சினிமாவை தவிர்த்து வேறு எந்த தொழிலும் அவருக்கு தெரியாது என்றே சொல்லலாம். பல திரைப்படங்களை சொந்தமாக தயாரித்து பல கோடியை இழந்த கமலஹாசன், இருந்தாலும் மனம் தளராமல் அடுத்தடுத்து சினிமாவில் சொந்தமாக படம் தயாரித்து, சினிமா விட்டால் எனக்கு வேறு எதுவும் தெரியாது என்பது போன்று தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்தவர்.
இடையில் பெரும் கடன் சுமையில் தத்தளித்து வந்த நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்து அவருடைய நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை வாரி அள்ளி குவித்தது. விக்ரம் திரைப்படம் இப்படி ஒரு பெரும் லாபத்தை அடையும் என்று கமலஹாசனே எதிர்பார்க்காத வகையில் பெரும் தொகையை வசூலித்து தந்தது விக்ரம். இந்த படத்தின் மூலம் அடைந்த லாபத்தை கடனையும் அடைத்து விட்டு மேலும் கைவசம் இருக்கும் பணத்தில் மூலம் அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார் கமலஹாசன்.
பல படங்களை தயாரிப்பதற்கு முன்னணி நடிகர்களிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து வரும் கமல்ஹாசன் பின்னணியில் இவ்வளவு கோடி பணம் எங்கிருந்து வருகிறது என்று பலருக்கும் குழப்பம் நீடித்து வந்த நிலையில், இதுகுறித்த ஒரு சில பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹாட்ஸ்டார் எம்டி மாதவ நாயரை விஜய் தொலைக்காட்சி மகேந்திரன் மூலம் கமலஹாசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே நெருங்கி பழகக் கூடியவர் கமல்ஹாசன் அப்படி இருக்கையில் மாதவன் நாயருடன் மிக நெருக்கமாக பழகி தொழில் ரீதியாகவும் உறவை மேம்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன். அவர் தயாரிக்க இருக்கும் படம் குறித்து முன்கூட்டியே மாதவன் நாயரிடம் ஒரு பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறார்.
இந்த படத்தின் ஹீரோ இவர், இசையமைப்பாளர் இவர், படத்தின் இயக்குனர் இவர், நாங்கள் தயாரிக்கிறோம், இந்த படத்தின் சேட்டிலைட் டிஜிட்டல் ரைட்ஸ் எவ்வளவு விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள் என்று படம் எடுப்பதற்கு முன்கூட்டியே ஆலோசனை நடத்தி விடுகிறார் கமல்ஹாசன், அதற்கு மாதவன் நாயர் ஒரு தொகையை சொன்னதும் அதற்கு ஏற்றார் போல் அந்த படத்தின் பட்ஜெட்டை வடிவமைத்து வருகிறார் கமல்ஹாசன்.
அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் கமிட்டாகி இருந்து படத்திற்கு 100 கோடி பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ஹாட்ஸ்டார் பெரும் தொகைக்கு வாங்குவதற்கு மாதவன் தயாரான பின்பு சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு 100 கோடி ரூபா பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்ல் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இப்படி ஒவ்வொரு ஹீரோவும் கமல்ஹாசன் இயக்கத்தில் கமிட்டாவது பின்னணியில் ஹாட்ஸ்டார் மாதவன் நாயர் அந்த படத்திற்கான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைக்கு முன்கூட்டியே தொகையை நிர்ணயித்து விடுவது தான் என்கின்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.