ஆள விடுங்கப்பா.. தேவர் மகன் சர்ச்சை… அந்தர் பல்ட்டி அடித்த மாரி செல்வராஜ்…

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு கடும் விவாதமாக மாறியுள்ளது, தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்ட படம், கமல்ஹாசன் சினிமா கேரியரில் முக்கியமான படம் தேவர் மகன்.

அப்படி ஒரு படத்தை கமல்ஹாசன் முன்னிலையில் சர்ச்சியாக்குரிய வகையில் பேசி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ். மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசி அது மிக பெரிய சர்ச்சையாக வெடித்த பின்பு, தேவர் மகன் படத்தை பார்க்காத இன்றைய தலைமுறையினர் பலர் தேடி சென்று அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என தேவர் மகன் படத்தை பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா 30 வருடங்களுக்கு முன்பு வந்த தேவர் மகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக உருவெடுத்து, தற்பொழுது தேவர் மகன் படத்தை பார்த்தவர்கள் மீண்டும் பார்க்க துடியுள்ளது, பார்க்கத்தவர்களை பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் வடிவேலு தேவர் மகன் படத்தில் நடித்த இசக்கி கதாபாத்திரம் பற்றி பேசுகையில்.

தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற இசக்கி, மாமன்னனாக இருந்தால் இப்படி இருக்குமோ அது தான் இந்த படம் என மாரி செல்வரை பேசியது, பெரும் குழப்பத்தை உருவாகியுள்ளது, தேவர் மகனுக்கு மாமன்னனுக்கு என்ன சம்பந்தம், தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரமும்,, பெரிய தேவர் கதாபாத்திரமும் ஒரே சமூகத்தை சேர்ந்த கதாபாத்திரம் போன்று தான் காட்சிகள் அமைத்திருக்கும் அப்படி இருக்கையில், இதில் இசக்கி கதாபாத்திரத்தில் என்ன குறையை கண்டார் மாரிசெல்வராஜ் என்கிற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் மாரிசெல்வராஜ் பேசிய சர்ச்சை பேச்சுகளுக்கு விளக்கம் விளக்கம் கொடுத்துள்ளார், அதில், அதாவது இசக்கிதான் மாமன்னனாக வருகிறார் என்று சொன்னதை எல்லாரும் தவறுதலாக புரிந்து கொண்டார்கள் என்று கூறினார். மேலும் ஒரு காமெடி நடிகரான வடிவேலு தேவர் மகன் படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதனால் தான் இந்த மாமன்னன் திரைப்படத்திற்கு வடிவேலுவின் அந்த நடிப்பு இருந்தால் சரியாக இருக்கும் என நினைத்து வடிவேலுவை கமிட் செய்து நடிக்க வைத்தோம்.

மற்ற படி இசக்கி தான் மாமன்னன் என்பது இல்லை என்றும் தேவர்மகனுக்கும் மாமன்னனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் பல்கலை கழகம் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் முன்னிலையில் மாரிசெல்வராஜ் இப்படி பேசியது தவறு என கமல்ஹாசன் ரசிகர்கள் மாரிசெல்வராஜை ரவுண்டு கட்டி சமூக வலைத்தளத்தில் வெளுத்து வரும் நிலையில்.

அதற்கும் விளக்கம் கொடுக்கும் வகையில் பேசிய மாரிசெல்வராஜ். யாரிடம் இதையெல்லாம் பேசினேன்? கலைக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய, கலையை புரிந்துகொள்ள கூடிய ஒரு ஆன்மா, ஓர் ஆளுமையிடம் பேசினேன். அவரும் எனக்கு ஆதரவாகப் பேசி, என் தலையை தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதைவிட என்ன வேண்டும்? இன்னும் சொல்லப்போனால் அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டான ஒரு கோபம்தான் இது.

அப்பாவை சரியாக புரிந்து கொள்ளாமல் கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற பையன் அப்பாவிடம் பேசியது போன்ற ஒரு தருணமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாரிசெல்வராஜ் கமல்ஹாசனை சுமார் 13 வருடங்களுக்கு முன்பு மிக கடுமையாக விமர்சனம் செய்து எழுதிய கடிதம் தற்பொழுது வைரலாகி வரும் நிலையில்.

அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் என்பது அன்றைக்கு இருந்த கோபம், மொழி ஆகியவற்றால் எழுதப்பட்டது. அப்போது எனக்கு வாசிப்புப் பழக்கம் எல்லாம் கிடையாது என அந்தர் பல்டி அடித்து தனக்கு எதிரான விமர்சனங்களில் இருந்து தப்பிக்கும் வகையில் விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் மாரிசெல்வராஜ்.