கோவையில் தனியார் பேருந்து ஒட்டிய பெண் ஓட்டுநர் ஷர்மிளா மிக குறுகிய காலத்தில் சமூக ஊடகங்கள் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டார், தொடர்ந்து அவர் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்ததை தொடர்ந்து அவருடைய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு பிரபலமானார், இதனை தொடர்ந்து பெண் அரசியல் பிரமுகர்கள், அந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பேருந்து ஓட்டுவதை பாராட்டும் விதத்தில் அவருடைய பேருந்தில் பயணம் செய்தனர்.
இது அந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்தது, இந்நிலையில் ஷர்மிளா ஒட்டிய பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்த போது அதே பேருந்தில் பணியாற்றும் பெண் நடத்துனருக்கும், ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, வேலையை விட்டு அவராகவே ஷர்மிளா விலகியதாக பேருந்து நிர்வாகம் தரப்பினர் தெரிவித்து இருந்தார்கள், ஆனால் கனிமொழி எம்பி பேருந்தில் பயணம் செய்ததால் அந்த பெண்ணுக்கு வேலை போனது என செய்திகள் பரவியது.
இதனை தொடர்ந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் வாங்குவதற்கு நிதி உதவி அளித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் சுமார் 25 வருடங்களாக ஆட்டோ ஓட்டிவரும் சென்னை பெரம்பலூரை ராஜி என்பவர், இவர் தினமும் சவாரி முடித்து வீடும் திரும்பும் வழியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களை இலவசமாக தனது ஆட்டோவில் ஏற்றி போகும் வழியில் இறக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் ஆட்டோ ஓட்டும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை இலவசமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ராஜி. அதாவது மாதத்திற்கு 2 நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆட்டோ ஓட்டி, அதில் வரும் பணத்தை ஏழை பெண் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக செலவு செய்கிறார்.
இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ராஜி அவர்கள், பெண்கள் கார் ஓட்டுவது புதிதல்ல, அந்த காலத்தில் இருந்தே பெண்கள் கார் ஓட்டி வருகிறார்கள் பெண்களைப் பொறுத்தவரை டிரைவிங் தொழில் என்பது கடிதம் என சொல்வார்கள். ஆனால் அந்த மாதிரி இல்ல, நாம் பழகி விட்டால் எதுவுமே கடினமில்லை, என்னைப் பொறுத்தளவு பெண்கள் செய்யும் சித்தால் வேலை தான் மிக கடினமான வேலை.
பேருந்து ஒரு பத்து நாட்கள் ஓட்டினால் போதும் நம்மளுக்கு கட்ரோலுக்கு வந்துவிடும், ஆனால் பெண்கள் கல் மணல் சுமந்து முதல் மாடிக்கு கட்டிட வேலைக்கு செல்கிறார்கள், அது நம்மளால் செய்யவே முடியாது. அந்த வகையில் பேருந்து ஓட்டுவதை விட கடினமான வேலைகள் பெண்கள் நிறைய பார்க்கிறார்கள். இருந்தாலும் பெண்கள் ஒரு நெரிசலான பகுதியில் இடிக்காமல் பேருந்து ஓட்டுவது திறமை தான் என தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர் ராஜி.
மேலும் பேரும் புகழும் தன்னால வரவேண்டும். அதை நம்ம தேடி போக கூடாது, அது நிலைக்காது என்பதற்கு சர்மிளா ஒரு முன்உதாரணம், ஷர்மிளாவுக்கு மக்கள் எப்படி பாராட்டி வந்தார்களோ.! தற்பொழுது அப்படியே மாறிவிட்டார்கள், அதனால் மக்கள் நாம் என்ன கோமாளித்தனம் செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கக் கூடாது, எவ்வளவு பாசிட்டி கமெண்ட்ஸ் ஷர்மிளாக்கு வந்தது இப்ப அதைவிட அதிகமாக நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறது .
எனக்கு தெரிந்தது கனிமொழி மேடம் கூட ஐயோ ஏன்டா அந்த பேருந்தில் போனோம் என்று யோசிப்பார்கள், கமல் சார் கூட இப்போது யோசிப்பார். நிறைய பேருக்கு இதெல்லாம் ஓட்டாகும் என்கிற ஒரு பார்வை இருக்கு ஆனால் அப்படியெல்லாம் இல்லை என 25 வருடங்களால ஆட்டோ ஓட்டி பல சமூக சேவைகளை செய்து வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி தெரிவித்துள்ளார்.