கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட அவமானம்… மாரிசெல்வராஜ் மீது உதயநிதியின் ரியாக்டசன் என்ன.?

0
Follow on Google News

மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நடிகர் கமலஹாசன், முன்பு மாரி செல்வராஜ் பேசிய பேச்சு கமலஹாசனுக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாகவே சினிமா வட்டாரத்தில் கருதப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் முக்கியமான படமாக பார்க்கப்படும் தேவர் மகன் படம் வெளியாகி சுமார் 30 வருடங்களுக்கு பின்பு, தற்பொழுது கமல்ஹாசன் எதிரே வைத்து கொண்டு தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் மாரிசெல்வராஜ் பேசியது மிக பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மாரிசெல்வராஜ் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினாலும், அதை கமல்ஹாசன் அமைதியாக கூர்ந்து கவனித்து வந்த போது, கமல்ஹாசன் முகம் கோபத்தில் கொப்பளிப்பதை பார்க்க முடிந்தது. ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட கமல்ஹாசன் முன்பு, மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு, ஒரு விருந்தினருக்கு கொடுக்கும் நாகரீகம் இதுவல்ல என்றும், இருந்தும் அனுபவமிக்க கமல்ஹாசன் மாரிசெல்வராஜ் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

நடிகர் கமல்ஹாசன் – உதயநிதி இருவருக்கும் இடையிலான நெருக்கமான நட்பின் காரணமாக, மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பின் பேரிலே கமல்ஹாசன் கலந்து கொண்டிருப்பார் என்கிறது சினிமா வட்டாரங்கள். கமல்ஹாசனுக்கு ஒரு அரசியல் தலைவரிடம் நெருக்கிய நட்பு உள்ளது என்றால், அது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் தான்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு ஜெயலலிதா அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக நாட்டை விட்டே சென்று விடுவேன் என்கிற முடிவுக்கு வந்தார் கமல்ஹாசன், அந்த அளவுக்கு ஜெயலலிதா – கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான மோதல் ஒருபக்கம் இருந்தாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் கமல்ஹாசனை நேரில் அழைத்து அடிக்கடி சந்தித்து நட்பு பாராட்டி வந்தவர் கருணாநிதி.

மேலும் பகுத்தறிவு, திராவிட கொள்கைகளை தன்னுடைய சினிமாக்களில் ஆழமாக பேச கூடியவர் கமல்ஹாசன். இப்படி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், உதயநிதி – கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான நெருக்கம் மிக அதிகம். கமலஹாசனை வைத்து உதயநிதி ஸ்டாலின் ஒரு படம் தயாரித்து அது மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தாலும், மீண்டும் தொடர்ந்து கமலஹாசனை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு இருவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் பயணித்து வருகிறார்கள்.

கமலஹாசன் நடிப்பில் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது, ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு பிரச்சனை காரணமாக படம் பாதியிலே நின்றது, இனி இந்தியன் 2 படம் அவ்வளவு தான் என பலரும் பேசி கொண்டிருக்க, அந்த படத்திற்கு ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளையும் சரி செய்து இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக செல்கிறது என்றால் அதற்கு காரணம் உதயநிதி தான்.

இந்நிலையில் உதயநிதிக்காக மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கமல்ஹாசனை சங்கடம் படும் விதத்தில் மாரி செல்வராஜ் பேசியது, உதயநிதிக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படு நிலையில், இதனால் உதயநிதி ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் முக்கிய பொறுப்பாளர் செண்பக மூர்த்தி இந்த விவகாரம் தொடர்பாக மாரிசெல்வராஜிடம் இது மாதிரி பேசியிருக்க தேவையில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.