பிக் பாஸ் முதல் வாரத்தில் விஜய் சேதுபதி ரொம்ப யதார்த்தமா இருக்கார். கமலை விட சூப்பர்’ன்னு பாராட்டுன பலர், அடுத்த வாரத்தில் ரொம்ப ஓவரா பேசுறார், சுவாரஸ்யமே இல்ல.. கமல் கமல்தான்’னு கருத்து தெரிவித்து வருகிறார்களா. விஜய் சேதுபதி மட்டுமில்லை கமல்ஹாசனுக்கு மாற்றாக யாரை போட்டிருந்தாலும், கண்டிப்பா இது தான் நிலை, கமல்ஹாசன் சினிமா அறிவு, அவர் பழகிய மக்கள், அவர் வயதுக்கே உரிய அனுபவம், அவர் படிச்ச புத்தகங்கள் எல்லாம் சேர்ந்தது தான் அவரோட hosting! ‘
ஒரு hostஆ விஜய் சேதுபதி அவர்கள் எப்படி இருக்கார் என்று பார்த்தால், முதல் எபிசோட் அன்று விஜய் சேதுபதியை பார்க்கும் அன்று, மனுஷன் செம்ம இயல்பா இருக்காரு.. சில சமயம், கமல் அவர்கள் கிட்ட காணப்படுற போலித்தனம் அல்லது லேசாக போரடிக்கக்கூடிய intellectual lecture எதுவும் இல்லாம இருக்கார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றியது, மேலும் அதே எபிசோட்ல 18 contestant’களையும் ‘உங்க காஸ்ட்யூம் நல்லாருக்கு.. நீ அழகா பேசுற’ன்னு ஒரே மாதிரி வாழ்த்தி அனுப்புறதை பார்க்குறப்போவே கொஞ்சம் சுவாரஸ்யக்குறைவாதான் இருந்தது.
இருந்தாலும், விஜய் சேதுபதியின் signature இயல்பான பேச்சு + counterகள் மூலம் hold பண்ணிருப்பார். ஆனா, இந்த வாரம் ரொம்ப மோசம். மனுஷன் எதுவுமே prepare பண்ணாம, free flowல வந்து பேசுறது ஒரு லெவலுக்கு மேல பார்க்க முடியல, கேஷுவலா அந்தந்த momentல ரியாக்ட் பண்றது எல்லா சமயமும் ஒர்க் ஆகாது.. விஜய் சேதுபதி இது ரியாலிட்டி ஷோங்குறதை மறந்து ஸ்கூல் வாத்தியார் மாதிரி ஆகிட்டார்.
இந்த வாரம் contestantகள் கிட்ட அவர் sarcasticஆ பேச try பண்ணது, rudeஆ மட்டும்தான் தெரிஞ்சது. actualஆ, அநியாயத்துக்கும் rudeஆ தெரிஞ்சது.. கண்டபடி மட்டம் தட்டி, humiliate பண்ணி பேசிட்டு இருந்தார் விஜய் சேதுபதி சில contestant களை பார்க்கவே பாவமாதான் இருந்தது. கடந்த கால பிக் பாஸ் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட manipulation பண்ண Julie மாதிரி ஒரு contestant கிட்டயோ, இல்ல ஊரே வெறுத்த extreme narcissist அசீம் கிட்ட கூட கமல் இப்படி பேசியிருக்க மாட்டார்..சிரிச்சுட்டே நக்கலாதான் கோபப்படுவார்.
எவ்ளோ கோபப்பட்டாலும், கடைசியில சகஜமா பேசிட்டு போவார். ஆனா விஜய் சேதுபதி ஒரு கட்டத்துக்கு மேல டீச்சர்கள் ஸ்கூல்ல தனக்கு பிடிக்காத students’ஐ கட்டம் கட்டி attack பண்ற ரேஞ்சுல இறங்கிட்டார்.. பாரதி கண்ணம்மா அருண் என்ன பாவம் பண்ணாரோ, ஒரு 30 தடவையாச்சும் குங்குமப்பூவை இழுத்துட்டார்.. போதாக்குறைக்கு, eliminate ஆன அர்னவ் கிட்டயும் குங்குமப்பூன்னு கூப்பிட சொல்றாரு..
எல்லாருக்கும் எல்லாமும் தெரியுமா என்ன.. குங்குமம் எதுலருந்து தயாரிக்குறாங்கன்னு தெரியாதது அவ்ளோ பெரிய குத்தமாயா.. அதுக்கு அவ்ளோ அசிங்கப்படுத்தி, கிண்டல் பண்ணி, விஜய் சேதுபதி அவமானப்படுத்தியிருக்க தேவையில்லை, மேலும் சில contestant பேரை சுட்டிக்காட்டி ‘எல்லாருக்கும் சேர்த்து நீங்களே பேசுறீங்க.. வழவழன்னு பேசிட்டே இருக்கீங்களே.. நேரா பாய்ண்ட்டுக்கு வாங்க’ன்னு விஜய் சேதுபதி பேசியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கால்வாசி நேரம் அவரே அதைதான் பண்றாருனு யாராவது அவரிடம் சொல்லுங்கப்பா என நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
யார் பேசுனாலும், ஒரு வரியை முழுசா முடிக்குறதுக்குள்ளேயே குறுக்கிடுறார் விஜய் சேதுபதி. ஏதோ கொலை குற்றவாளிகள் கிட்ட பேசுற ரேஞ்சுல எதுக்காக இவ்ளோ கொந்தளிக்க வேண்டும் விஜய் சேதுபதி.மொத்தத்தில் சேனல் சைட்ல இருந்தோ இல்ல வேற யாராச்சும் கொஞ்சம் விஜய் சேதுபதிக்கு டிப்ஸ் கொடுத்து direct பண்ணா, pickup ஆக வாய்ப்பு உள்ளது. இல்லை என்றால் கமல்ஹாசன் பால் ஊட்டி சீராட்டி வளர்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.