பா.ரஞ்சித்க்கு கல்தா கொடுத்த கமல்ஹாசன்… இருவருக்கும் என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் அவருடைய நடிப்பில் வெளியான படம் விக்ரம். இந்த படம் கமல்ஹாசனுக்கு எதிர்பாராத பெரும் லாபத்தை பெற்று தந்தது. இதற்கு முன்பு கமல்ஹாசன் வாங்கிய கடனையும் அடைத்து விட்டு மேலும் கிடைத்த லாபத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரிக்கும் அளவிற்கு பெரும் லாபத்தை பெற்று தந்தது விக்ரம் திரைப்படம்.

மேலும் நடிகர்கள் கமலஹாசனின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து அவருடைய சம்பளமும் மிக குறைந்த அளவே வாங்கிக் கொண்டிருந்த நிலையில், விக்ரம் படத்திற்கு பின்பு தற்பொழுது நடிகர் கமலஹாசனின் சம்பளம் 100 கோடியை தாண்டி உள்ளது. மேலும் தொடர்ந்து தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் அதிக படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன் தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித்தை சந்தித்து கதை கேட்ட கமல்ஹாசன், தற்பொழுது பா.ரஞ்சித் இயக்கும் தங்காலன் திரைப்படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், அதே போன்று கமல்ஹாசன் தற்பொழுது நடிக்கும் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு பா ரஞ்சித் இயக்கம் படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்றும், இந்த படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் என தகவல் வெளியானது.

ஆனால் கமல்ஹாசன் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் கமல்ஹாசன். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி இருந்த கமல்ஹாசன்.

அந்த படத்திற்கு அட்வான்ஸ் தொகையும் ஏற்கனவே ஹெச்.வினோத்க்கு கொடுத்திருந்த கமல்ஹாசன், மேலும் ஒரு பிஎம்டபிள்யூ காரும் ஹெச் .வினோத்துக்கு பரிசளித்து இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு பா.ரஞ்சித், மணிரத்தினம், அல்லது ஹெச்.வினோத் என யாருடைய படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்தடுத்து படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது சத்தமே இல்லாமல் பா.ரஞ்சித்க்கு கல்தா கொடுத்து கமல்ஹாசன் கழட்டிவிட்டு விட்டதாகவும், அதனால், பா.ரஞ்சித் – கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கைவிடப்பட்டு விட்டது என கூறப்படுகிறது.