நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன் என்னதான் அரசியலில் குதித்தாலும், தொடர்ந்து இந்தியன் 2, தக் லைஃப் என அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர்,தொலைக்காட்சி தொகுப்பாளர் என்ன பல பல அவதாரங்களை எடுத்து சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் கமலஹாசன்,
கமலஹாசன் இப்படி தனது அசாதாரண திறமையால் சினிமாவில் முன்னணி இடத்தில் இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆம் கமல்ஹாசன் தனது 24 வது வயதில் 1978 இல் நடன கலைஞரான வாணி கணபதியை திருமணம் செய்தார்.இருப்பினும் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
முதல் கல்யாணம் முற்றுப்புள்ளியுடன் முடிவு பெறவே, அடுத்ததாக நடிகை சரிகாவை கல்யாணம் செய்தார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்ட சரிக்கா கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். இந்த தம்பதியினருக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக ஜோடியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர், சில காரணங்களால் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
அப்போதும் கூட, இரண்டு திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்று கமல்ஹாசன் துவண்டு விடவில்லை. அதே ஆண்டு நடிகை கௌதமியுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அண்டர்ஸ்டாண்டிங்லையே வாழ்ந்து வந்தாலும், நடிகர் கமலஹாசனின் சினிமாவிலும் பிசினஸிலும் கௌதமி பக்கபலமாக இருந்து உதவி செய்து வந்தார். குறிப்பாக கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு கமல்ஹாசன் காஸ்ட்யூம் டிசைனராக இருந்து வந்தார் கவுதமி.
சில வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் ஏற்படவே இந்த ஜோடியும் தனியாக பிரிந்து விட்டது. இந்நிலையில் இந்தக் கல்யாணம் எல்லாம் நமக்கு செட் ஆகாது என்று உதறி தள்ளிவிட்டு அரசியலில் இறங்க முடிவு செய்தார். அதேபோல் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை உருவாக்கி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
ஒரு பக்கம் கட்சி அரசியல் பணிகள், மற்றொரு பக்கம் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளர், சினிமா என இந்த வயதிலும் பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு, பெண் ஒருவர் வலது கையாக செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது பிரபல டான்ஸ் மாஸ்டர் -ன் மனைவி தான் இப்போது கமல்ஹாசனுக்கு எல்லாமுமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்தப் பெண் வேறு யாரும் இல்லை பிரபல டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தாராம். இவர்தான் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அணியும் ஆடைகளுக்கு வடிவமைப்பாளராம். அதே போன்று கமல்ஹாசன் நடிக்கும் படங்களிழும் அவருக்கு ஆடைகளுக்கு வடிவமைப்பாளராக உள்ளாராம் அமிர்தராம். மேலும் கமல்ஹாசனின் நடிப்பு கால் சீட், தயாரிப்பு என் சினிமா சார்ந்த அனைத்தும் இவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு கமல்ஹாசனின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறாராம். கமல்ஹாசன் கவுதமியை விட்டு பிரிந்ததிலிருந்து அத்தனை குறிப்புகளையும் இவர்கையில் ஒப்படைத்துள்ளாராம்.