நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்து வெற்றிகரமான நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா மோகத்தால் நடிகர், நடிகைகளுக்கு சிலை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் தன்னைப் பெற்ற தாய்க்கென கோவிலைக் கட்டிய சிறப்பான மனிதர் இவர்.
அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இவர் தனது சிறுவயதில் பிரெயின் ட்யூமரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது அவரது அம்மா இவருக்கு குணமாகவேண்டும் என்று ராகவேந்திரர் சுவாமியை வேண்டிய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரைன் ட்யூமர் சரியானதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே தன் பெயருடன் ராகவா என்ற பெயரை சேர்த்துக் கொண்டுள்ளதாக அவர் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ராகவா லாரான்சாக ரசிகர்களிடையே அறிமுகமான இவர், ஆரம்ப காலத்தில் நடன இயக்குனராக பல்வேறு படங்களில் பணிபுரிந்திருக்கிறார். குறிப்பாக சிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே என்னும் பாட்டிலும் பிரபுதேவா உடன் இணைந்து ஆடி உள்ளார். திடீரென நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட லாரன்ஸ் தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி படங்களில் கதாநாயகனாக உருவெடுத்த ராகவா லாரன்ஸ் “முனி” என்ற படத்தின் மூலம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமாகத் தொடங்கினார்.
அதனையடுத்து, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, காஞ்சனா 2 போன்ற பல்வேறு திகிலூட்டும் படங்களிலேயே நடித்து வந்தார். ராகவா லாரன்ஸ் ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இது குறித்து அவரெ பல்வேறு மேடைகளிலும் பேசியுள்ளார். இப்பவும் கூட ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
‘ரஜினி சார் எனக்கு குரு, என்னுடைய வெற்றிக்கு முக்கால்வாசி காரணம் ரஜினி தான்’ என்று அவர் பேசாத மேடைகளே கிடையாது. அந்த அளவிற்கு ரஜினி பக்தனாக இருக்கும் ராகவா லாரன்ஸ், உலக நாயகன் கமல் ஹாசனை அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். நடிகர் கமலஹாசனின் நடிப்பைப் பார்த்து, சினிமாவில் நுழைந்தவர்கள் ஏராளம்.
சொல்லப்போனால் ரஜினிக்கு எப்படி ராகவா லாரன்ஸ் இருக்கிறாரோ அதுபோல, கமலுக்கு லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், மிகப்பெரிய கமல் ரசிகன். இது பற்றி அவரே பல இடங்களில் தெரிவித்துள்ளார். அந்தவகையில், லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியான படம்தான் விக்ரம். இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.
அதுமட்டுமின்றி, கமலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமும் கூட. இந்த ‘விக்ரம்’ படத்தில் சந்தானம் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். முதலில் இந்த கேரக்டரில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரஜினி ரசிகரான லாரன்ஸை நடிக்க வைக்கணும்னு இயக்குனர் லோகேஷ் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என லாரன்ஸ் மறுத்திருக்கிறார்.
மேலும், படத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் ரத்தம் சதையுமாய் சண்டைகள் இருப்பதால் எனக்கு ஒத்து வராது என்று காரணங்களைக் கூறி விலகியிருக்கிறார். ஆனால், அது உண்மையான காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அது எப்படி, ராகவா லாரன்ஸ் வன்முறை காட்சிகளைக் காரணமாகக் கூறலாம்? அவர் நடித்த காஞ்சனா படத்தில் மோசமான சண்டை மற்றும் வன்முறைக் காட்சிகளெல்லாம் இருக்கும்.
அப்படி இருக்கும் போது விக்ரம் படத்தை மட்டும் இந்த காரணங்களை சொல்லி இருப்பது எந்த விதத்தில் உண்மையாக இருக்க முடியும் என்று கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமில்லை, இப்போது லோகேஷ் தாயரிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு லாரன்ஸ் கமிட்டாகி இருக்கிறார். அன்று லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்தில் வன்முறைக் காட்சிகள் இருக்கும் என்று கூறி ஒதுங்கிய லாரன்ஸ் இந்தப் படத்திலும் ரத்தம் சதையுமாக வன்முறை காட்சிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை யோசிக்கமாலேயா இருப்பார்.
லாரன்ஸ்-க்கு கமல் படத்தில் நடிக்க இஷ்டம் இல்லை என்பதால் தான் படத்தில் நிறைய குறைகளை சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். என்னதான், மிகப்பெரிய ரஜினி ரசிகராக இருந்தாலும், கலைத்துறை என்று வரும் போது அந்த கலைக்குத் தானே முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். சினிமாவில் ரஜினி என்ன, கமல் என்ன எல்லோரும் கலைஞர்கள்தானே. எப்படிப் பார்த்தாலும் லாரன்ஸ் இந்த அளவிற்கு கமலின் படத்தை உதாசீனப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. அதற்கு சொன்ன காரணமும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்பது அனைவருக்கும் தெரிகிறது.