சமீபத்தில் ஐசரி வேலன் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவுண்டமணி , கமல்ஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே கமல்ஹாசன் பேசி முடித்துவிட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கமல்ஹாசன் அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த நடிகர் கவுண்டமணியிடம் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்று சென்றார்.
கவுண்டமணி எந்த இடம் எப்படி பட்டவர்கள் என்று பார்க்கமாட்டார். யாராக இருந்தாலும் தன்னுடைய பாணியில் நக்கல் செய்து கவுண்ட் கொடுப்பதில் பலே கில்லாடி ஆனால் தற்பொழுது 80 வயதை தொட்டுவிட்ட கவுண்டமணி சமீபத்தில் நடந்த ஐசரி வேலன் சிலை திறப்பு விழாவில், மிக பக்குவமாக பேசியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவருடைய வயது பக்குவம் தான் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா தயாரிப்பில் சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசன் உடன் கவுண்டமணி இணைந்து நடித்திருந்தார். அப்போதெல்லாம் உணவு சாப்பிட தனி கேரவன் கிடையாது. மரத்தடியில் சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். அப்படி படப்பிடிப்பு தளத்தில் ஒருமுறை கவுண்டமணி மற்ற நடிகர்கள் அனைவரும் மரத்தை சுற்றி அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில், ரசிகர் ஒருவர்,
கவுண்டமணியிடம், சார் இந்த படத்தில் உங்களுடன் செந்தில் நடிக்கவில்லையா.? என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி இந்த படத்தில் வெள்ளை செந்தில் ஒருவர் நடிக்கிறார், அவர் பெயர் கமல்ஹாசன் என நக்கல் அடிக்க அந்த இடமே கல கல என்று சிரிப்பு சத்தம் சில நிமிடம் வரை நீடித்தது. இதை அங்கே இருந்த கமல்ஹாசன் அவமானமாக கருதினார். இதனால் டென்சனான கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் யாரிடமும் ஏதும் பேசாமல் சென்று விட்டார்.
உணவு இடைவேளை முடிந்து படப்பிடிப்பு தொடங்கிய போது கமல்ஹாசனை அங்கே காணவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் இளையராஜாவை தொடர்புகொண்டு. நடந்ததை தெரிவித்து, கவுண்டமணி என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என கமல்ஹாசன் பிடிவாதம் பிடித்துள்ளார். உடனே இசைஞானி இளையராஜா அவருடைய அண்ணன் பாஸ்கரை அழைத்து கவுண்டமணியிடம் பேச வலியுறுத்தியுள்ளார்.
பாஸ்கர் இது குறித்து கவுண்டமணியிடம் பேச.. அதற்கு என்னயா ..மன்னிப்பு தான ..கேட்கிறேன் என்று கவுண்டமணி தெரிவித்துள்ளார்.மறுநாள் கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு காரில் வந்து இறங்க. அங்கே பலர் முன்னணியில், கமல் என்னை மன்னித்து விடுங்க, உங்களை வெள்ளை செந்தில் என்று அழைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்க, உங்களை வெள்ளை செந்தில் என்று அழைத்ததற்கு மன்னித்து விடுங்க என்று சத்தம் போட்டு நக்கலாக மன்னிப்பு கேட்க, கமல்ஹாசன் விடுங்க ..விடுங்க என்று படப்பிடிப்பை தொடங்கியதாக கூறப்படுகிறது.