மத ரீதியாக ஜிபி முத்துவை இழிவு படுத்திய கமல்ஹாசன்… பிக் பாஸ்ல் நடந்த உச்சகட்ட கேவலமான செயல்..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி தினம்தோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது, இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் கமலஹாசன் தொகுத்து வழங்குவார்.

இதனால் மற்ற நாட்களில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை விட சனி மற்றும் ஞாயிறு அன்று பார்வையாளர்கள் அதிகம் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள். பொதுவாக பிக் பாஸ் ஷோவில் கமலஹாசன் பேசுவதற்கு கடந்த சீசன்களில் தொடர்ந்து தற்பொழுது வரை யாரும் எதிர்த்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் தற்போது டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து கொடுக்கும் கவுண்டர்கள் அனைத்தும் கமல்ஹாசன் அடுத்த கேள்வி கேட்க முடையாதவறு திணறி வருகிறார்.

ஒரு புகழ்பெற்ற உச்ச நடிகர் கமலஹாசன் ஜோக்கர் போன்று மாறி வருவது மக்கள் மத்தியில் கமல்ஹாசன் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது ஜிபி முத்துவை மத ரீதியாகவும் கமலஹாசன் கிண்டல் செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர் ஒரு ஜி பி முத்துவிடம் கேள்வி கேட்கிறார்.

அதில் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் சிங்கியா? செங்கியா? மங்கியா? என்று சக போட்டியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு கமலஹாசன் இன்னும் ஒன்றை விட்டு விட்டார்கள் என்று கூறிவிட்டு அமைதியாக இருக்கிறார். அவருக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் ச சங்கி என்று தெரிவிக்க, அதற்கு கமல்ஹாசன் எனக்கும் அதுதான் தோன்றியது என பதில் அளிக்கிறார்.

இதனை தொடர்ந்து கேள்வி கேட்ட மற்றொரு போட்டியாளர் ஓகே ஓகே எனக்கு புரிகிறது புரிகிறது என்று தெரிவிக்க, இதற்கு கமல்ஹாசன் ஜி பி முத்துவிடம் சரி நீங்கள் இந்த மூன்று கேள்விக்கு பதில் சொல்லுங்க என கூறுகிறார். அதற்கு ஜிபி முத்து மங்கி என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜி.பி முத்து எந்த நேரமும் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருப்பதால், கமலஹாசன் அவரை மத ரீதியாக சங்கி என்று மறைமுகமாக இழிவு படுத்தியுள்ள சம்பவம் சம்பளம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.