லியோ படத்தில் கமல்ஹாசன்.. உடையும் ரகசியம்.. என்ன கேரக்டர் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து சென்றுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குழுவினருடன் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். காஷ்மீரில் மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சமீபத்தில் நடிகர் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு அவர் சென்னை திரும்பியுள்ளார். அடுத்தடுத்த வாரங்களில் கௌதம் மேனன் நடிக்கும் காட்சிகள் மற்றும் ஹிந்தி நடிகர் சஞ்சய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் ஏழு வில்லன்கள் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து அசத்தியிருப்பார் நடிகர் சூர்யா.

அந்த வகையில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இது குறித்து படக்குழுவினர்களிடம் விசாரித்தால் இது உண்மை அல்ல என்று கூறப்படுகிறார்கள். ஆனால் கதை டிஸ்கஷன் போது கமல்ஹாசன் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி லோகேஷ் கனகராஜ் டிஸ்கசன் செய்ததாகவும் தகவல் வெளியாகிறது.

அதன் அடிப்படையில் நடிகர் கமலஹாசன் லியோ படத்தில் நடிப்பதை மிக ரகசியமாக லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளதாகவும்,ம் எப்படி விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது மிக ரகசியமாக வைத்திருந்தது போல் லியோ படத்தில் கமலஹாசன் நடிப்பதையும் ரகசியமாக வைக்க திட்டமிட்டுள்ளார், அதனால் தான் அறிவிப்பு வெளியிடாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.