அமைச்சரான உதயநிதி .. பெரும் சோகத்தில் கமல்ஹாசன்.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பொருப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமனிதன்’ தான் என்னுடைய கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், படத்திலிருந்து தான் விலகுவது குறித்து கமலிடம் தெரிவித்தபோது அவர் மகிழ்ச்சியுடன் தனக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார் உதயநிதி. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு சினிமா துறையை சேர்ந்த ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதில் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்து செய்தியில், வாழ்த்துகிறேன் தம்பி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதை பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், 3 தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என கமல்ஹாசன் அவருடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் சொந்த தயாரிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி வெளியிட்டது. இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து சரியான கணக்கை கமலஹாசனிடம் ஒப்படைத்தது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

இதிலிருந்து உதயநிதி மற்றும் கமலஹாசன் இருவருக்குமான நெருக்கம் அதிகமானது, இதனால் தொழில் ரீதியாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி மூவிஸ் இணைந்து பல படங்களை தயாரிக்க முடிவு செய்தது. அதன் காரணமாகத்தான் மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்து மிக பெரிய பட்ஜெட்டில் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜென்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அதேபோன்று ராஜ்கமல் ஃபிலிம்சில் ஒரு படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது மேலும் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளது, கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்கின்ற முடிவை மாமன்னன் படத்தில் கமிட்டாகும்போது எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஏ ஆர் ரகுமானை அணுகிய போது அதற்கு ஆரம்பத்தில் அவர் மறுத்துவிட்டதாகவும். அதன் பின்பு உதயநிதி ஸ்டாலின் இதுதான் என்னுடைய கடைசி படம் அதனால் நான் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முன்பு ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கண்டிப்பா நீங்கள் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பின்பு தான், ஏ ஆர் ரகுமான் மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

முத்தையாவுக்கு எதிராக பா.ரஞ்சித் உடன் கை கோர்த்த கமல்… என்ன பிரச்சனை தெரியுமா.?

உண்மை செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.