வேத ராமமூர்த்தி எழுதிய குற்ற பரம்பரை என்கின்ற நாவலை நடிகர் சசிகுமார் வெப் சீரியஸ் ஆக எடுத்து வருகிறார். குற்றப்பரம்பரை நாவலை தழுவி திரைப்படமாக எடுப்பதில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா இருவருக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டு, பின்பு அது சண்டையாக மாறியது. ஒருவருக்கொருவர் பொது மேடையில் கடுமையாக மாற்றி மாற்றி வசைப்பாடிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் பாலாவிடம் மோதி வெற்றி பெற முடியாத பாரதிராஜா குற்றப்பரம்பரை படத்தை கைவிட்டுவிட்டார். இந்நிலையில் பரதேசி என்கிற மிக பெரிய ஹிட் கொடுத்த பாலா இந்த படத்தை முடித்துவிட்டு குற்றம்பரம்பரை படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கினார். நடிகர் கமலஹாசனை சந்தித்து குற்ற பரம்பரை படத்தின் கதையை இரண்டு நிமிடத்தில் சுருக்கமாக பாலா தெரிவித்துள்ளார்.
ஆனால் கமல்ஹாசன் குற்றப்பரம்பரை படத்தின் கதை விளக்கமாக தெரிவிக்க கேட்டுள்ளார். உடனே பாலா அதற்கு சில நாட்கள் அவகாசம் கேட்டு, எழுத்தாளர் வேத ராமமூர்த்தியை அணுகி, எனக்கு கதை சொல்ல தெரியாது, அதனால் நீ சென்று குற்றம்பரம்பரை படத்தின் முழு கதையையும் விளக்கமாக கமல்ஹாசனிடம் தெரிவிக்குமாறு பாலா அனுப்பி வைத்துள்ளார்.
முழு கதையையும் கேட்ட கமல்ஹாசன் கதை ரெம்ப பிடித்திருக்கு என தெரிவித்து ஓகே செய்துள்ளார். குற்றம்பரம்பரை படத்தின் கதை முக்குலத்தோர் சமூகம் சார்ந்த கதை என்பதால், ஏற்கனவே அதே சமூகம் சார்ந்த தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் கமலஹாசன் நடித்திருந்தார், அதனால் குற்றப்பரம்பரை படத்தில் கமல்ஹாசன் நடிப்பது மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான வேலைகளை தொடங்க பாலாவுக்கு கமல்ஹாசன் பச்சைக்கொடி காட்டிய பின்பு, பாலாவுக்கு கமலஹாசனை வைத்து படம் இயக்குவதில் ஒருவித தயக்கம் இருந்துள்ளது. பொதுவாக நடிகர் கமலஹாசன் நடிக்கும் படத்தில் இயக்குனரை சுதந்திரமாக செயல்பட விட மாட்டார்.காட்சி கதை மற்றும் காட்சி அமைப்பு என அனைத்திலும் கமலஹாசன் தலையீடு இருக்கும்.
இதனால் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் குற்றப்பரம்பரை படத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அடுத்ததாக நாச்சியார் படத்தை இயக்க தொடங்கி விட்டார் இயக்குனர் பாலா. ஆனால் பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் குற்றப்பரம்பரை படத்தை தூசி தட்டி கமல்ஹாசனை சந்தித்து குற்ற பரம்பரை படத்திற்கான வேலையை தொடங்க இருப்பதாக தெரிவித்த பாலா.
அதற்கான கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுள்ளார் பாலா, ஆனால் ஏற்கனவே தான் ஓகே செய்தும் அலட்சியப்படுத்திவிட்டு பாலா சென்றதை மனதில் வைத்து, மீண்டும் பாலா இயக்கத்தில் குற்ற பரம்பரை படத்தில் நடிப்பதற்கு முடியாது என்று சொல்லி பாலாவை அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத பாலா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் கமல்ஹாசனிடம் சரண்டர் ஆகி பின் கமலஹாசனால் தூக்கி எறியப்பட்டதாக கூறப்படுகிறது.