ஒட்டுமொத்த சென்னையையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு விட்டது என்று சொல்லும் அளவுக்கு மொத்த சென்னையும் சீர் குலைந்து போய் உள்ளது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்கிறது. மிக்ஜாம் புயல்காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய சென்னனை மக்கள் மின்சாரம் இல்லாமல், அத்தியவசிய பொருட்கள் வாங்க முடியாமல், வந்தாரை வாழவைத்த சென்னை என மார் தட்டிய சென்னை வாசிகள், பால் பாக்கெட்டுக்கும், பிஸ்கட் பாக்கெட்க்கும் கையேந்தி வரிசையில் நிற்கும் அவலம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.
இந்த நிலையில் சென்னை மழை வெள்ளம் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களும், விவாதங்களும் அரங்கேறி வருகிறது, பல சினிமா துறையை சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வரும் நிலையில், சில நடிகர்கள் வீடியோ வாயிலாக அரசை குறை சொல்லி வருகிறார்கள், சில நடிகர்கள் அரசை பாராட்டியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மழை தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ட்வீட் பேசு பொருள் ஆகி உள்ளது. அதில் ”அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்ய உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.
இதே கமல்ஹாசன் தான் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடந்த கால ஆட்ச்சியில் கனமழை பாதிப்பு ஏற்பட்ட போது, அவருடையா ட்விட்டர் பதிவில், “ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, “கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை, கரையோர மாவட்டங்களின் மேல், கடைக்கண்ணாவது வையுங்கள்” என்று இடித்துரைத்திருந்தார்.. ஆனால், இந்த முறை சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க கமல் இடித்துரைக்கவேயில்லையே? விமர்சித்தும் கருத்து சொல்லவில்லையே ஏன்? என்று சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணியுடன் இணைய போவதால்தான், வெள்ளம் குறித்து ஆளும் கட்சிக்கு சாதகமாக, கமல் இப்படி கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் சலசலக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், சமூக ஆர்வலரும், பிரபல நடிகையுமான கஸ்தூரி, கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பேசியது குறித்த டிவீட்டை தனது டிவீட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை கஸ்தூரி, தட் படுத்தேவிட்டானய்யா மொமென்ட், மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது.. என குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.