நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து பிரச்சனை தான் கடந்த சில நாட்களாகவே பலராலும் பேசப்பட்டு வருகிறது. முதலில் இது ஒரு வதந்தி போல் தான் பார்க்கப்பட்டு வந்தது ஆனால் பத்திரிக்கையாளர்கள் சிலர் அளித்த பேட்டி மூலம் , ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து உண்மை எனவும், சொல்லப்போனால் நடிகர் ஜெயம் ரவி தான் விவாகரத்துக்கே பதிவு செய்திருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி செய்திருக்கும் விஷயம் தான் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வந்தது. அதிலும் முக்கியமாக நடிகர் ஜெயம் ரவி பொன்னியன் செல்வன் படத்தில் நடித்த போது கூடவே நடித்த நடிகையுடன் நெருக்கம் காட்டுவதாக கூறி பேச்சுக்கள் அடிபட்டதை தொடர்ந்து தான் இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை தொடங்கியதாகவும் கூறப்பட்டது.

மேலும் நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் சிலர் உறுதியாக கூறி வருகின்றனர். அதாவது ஜெயம் ரவியின் நிறைய படங்களை மாமியார் ஆன சுஜாதா விஜயகுமார் தான் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் என்கின்ற நிறுவனத்தை வைத்து தான் produce பண்ணியிருக்கிறார்.
அதில் சில படங்கள் நஷ்டம் அடைந்திருக்கிறது என்றாலும் பல படங்கள் லாபம் கொடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான சைரன் படத்தைக் கூட ஜெயம் ரவியின் மாமியார் ஆன சுஜாதா விஜயகுமார் தான் produce பண்ணியிருக்கிறார். பொன்னியன் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதால் மருமகனான ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் மாமியார் பழைய சம்பளத்திலே ஒப்பந்தம் செய்கிறாராம்,
மேலும் மற்ற தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சென்றால் முட்டு கட்டை போடுகிறாராம் மாமியார் சுஜாதா விஜய்குமார். இதுதான் இப்போது குடும்ப பிரச்சினையாக மாறி விவாகரத்து வரை சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் விவாகரத்து தொடர்பான வதந்திகள் பரவிய பொழுது ஆர்த்தி வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தின் போஸ்டரை பதிவிட்டு அதில் “காதலெனும் வார்த்தை அது வார்த்தை இல்லை வாழ்க்கை” என மென்ஷன் செய்திருந்தார்.
இந்த இன்ஸ்டா பதிவு ஆர்த்திக்கு விவாகரத்தில் விருப்பமில்லை என்பதையும், ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதையும் மறைமுகமாக தெரிவிக்கும் படி இருந்தது. ஆனால் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார். மேலும் ஆர்த்தியின் இச்செயல் அவருக்கும் விவாகரத்தில் முழு விருப்பம் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இப்படி ஒரு பக்கம் சினிமாவில் மாமியார் கொடுக்கும் டார்ச்சர், மறுபக்கம் நடிகையுடன் கிசு கிசுவில் சிக்கியதால் மனைவி கொடுக்கும் டார்ச்சர் என கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளான ஜெயம் ரவி விவாகரத்து முடிவு எடுக்க காரணம் என கூறப்படுகிறது.