சமீபகாலமாகவே தமிழ் சினிமா துறையில் விவாகரத்து, விவாகரத்து என்ற சொல்தான் அதிக அளவு ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த விவாகரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே நடிகர் தனுஷ், அந்த வரிசையில் தான் நடிகர் ஜெயம் ரவியும் இடம்பெற்றுள்ளார். இவர் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக முடிவு எடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியிருந்தது.
தற்போது ஜெயம் ரவியின் இந்த விவாகரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என பலரும் குழம்பி வந்த நிலையில், இதற்கு காரணம் அவரது மாமியார் தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம்ரவி 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல், மனம் ஒத்த தம்பதிகளாக இருக்கும் இவர்கள், விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளதில் ஏதோ ஒரு பிண்ணனி இருக்கிறது என அதற்கு ஜெயம் ரவியின் மாமியார் தான் காரணம் என்றும் கூறிவருகின்றனர்.
ஜெயம்ரவி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்தே நிறைய படங்கள் ஹிட் அடித்தது. ஆனால், பிறகு போக போக பல படங்கள் பிளாப் ஆகத்தொடங்கியது. அப்போது தன் மருமகனை சினிமா துறையில் நிலை நிறுத்த வேண்டும் என, அவருடைய சொந்த தயாரிப்பில் தொடர்ந்து பல படங்களை சுஜாதா எடுத்து வந்தார். பிறகு பல படங்கள் நல்ல வசூலை பெற்று தந்ததால் அதாள பாதாளத்தில் இருந்து வெளிய வந்த ஜெயம் ரவிக்கு, பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் பெரிய ஹிட் கொடுத்தது. எனவே தற்போது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் ஜெயம் ரவி நடிக்காமல் தன் மாமியார் தயாரிப்பிலேயே நடித்து வருகிறார்.
இதில் இருந்து தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. எந்த தயாரிப்பாளர்கள் கதை சொல்வதற்காக வந்தாலும் முதலில் அந்த கதையை மாமியாரிடம் தான் சொல்ல வேண்டுமாம், இதனால் தயாரிப்பாளர்கள் கடும் கோபத்திலும் இருந்து வந்திருக்கிறார்கள் . இந்த சூட்டோடு சூடாகத்தான், நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய பாண்டியராஜ், ஒரு கதையை ஜெயம்ரவியிடம் சொல்லி ஓகே வாங்கி, அந்த படத்தையும் இவரின் மாமியாரே தயாரிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த படத்திற்கு ஜெயம் ரவி 15 கோடியாக இருந்த தனது சம்பளத்தை 25 கோடியாக உயர்த்தி கேட்டிருக்கிறார், ஜெயம் ரவி சம்பளத்தை உயர்த்தி கேட்டதும், இவருக்கெல்லாம் இவ்வளவு சம்பளம் தர முடியாது என உதாசீனப்படுத்தி, இப்படத்திலிருந்து மாமியார் பின்வாங்கி விட்டார். இவர் பின்வாங்கியதும் இயக்குனர் பாண்டியராஜ் அந்த கதையை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் சொல்லி ஓகே செய்து, அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை கேட்டிருக்கிறார், அவருக்கும் இந்த கதை பிடித்து போக அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் கடுப்பான ஜெயம் ரவி, தன் மாமியார் எனக்கு 25 கோடி சம்பளம் தர முடியாது என அசிங்கப்படுத்தியதோடு, ஒரு நல்ல கதையில் நடிக்கவிருந்த வாய்ப்பும் தன்னை விட்டு போய்விட்டது என கடும் அப்சட்டில் இருந்துள்ளார்.
இதில் வேறு சமீபகாலமாக ஜெயம் ரவிக்கும் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததோடு, பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் கிசுகிசுப்புகள் வெளிவந்தது என பல டார்ச்சர்களுக்கு ஆளாகியுள்ளார். மனைவியின் தொல்லையும் தாங்க முடியவில்லை, மாமியாரால் நல்ல பட வாய்ப்பும் கை நழுவி போகிறது என இந்த குடும்பத்திற்கே ஒரு கும்பிடு போட்டு வெளியே போக வேண்டியது தான் என்று முடிவெடுத்து, தற்போது ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.