கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் புதிய படத்திற்கான அப்டேட் வருகிறதோ.? இல்லையோ.? ஒவ்வொரு செலிபிரிட்டியின் விவாகரத்து குறித்த அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்பு, அடுத்தடுத்து சில நாட்களில் இயக்குனர் பாலா – முத்து மலர் விவாகரத்து, ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவி சைந்தவி விவாகரத்து என சினிமா துறையைச் சார்ந்த பலரும் தொடர்ந்து தங்களுடைய திருமண உறவை முறித்துக் கொண்டு விவாகரத்தை அறிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய விவாகரத்து முடிவை உறுதி செய்துள்ளார் ஜெயம் ரவி. இந்த நிலையில் பொதுவாகவே தமிழ் சினிமாவில் சினிமா துறையைச் சார்ந்த நடிகைகள் யாராவது விவாகரத்து செய்கிறார்கள் என்றால் அதற்கு ஏதோ ஒரு வகையில் தனுஷ் தான் என்கின்ற சர்ச்சை அவ்வப்போது வெடித்து வரும்.
அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்துளையும் தனுஷ் குறித்த சர்ச்சை வெடித்து உள்ளது. தமிழ் சினிமா நடிகர்களில் ஜெயம் ரவி திருமணத்துக்கு முன்பும், பின்பும் எந்த ஒரு நடிகைகளிடமும் கிசு கிசுவில் சிக்காமல் இருந்து வருகின்றவர், அந்த வகையில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது கூட மனைவியுடன் தான் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது.
இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் குடும்ப நபர்களை அறிமுகம் செய்து நட்பை வளர்த்து கொள்ள கூடியவர்களாக இருந்து வருகின்றவர்கள். இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் ஜெயம் ரவி, இந்த பார்ட்டியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார்,
அப்போது அந்த பார்ட்டியில் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இருவரும் சண்டை போடுவது போன்ற புகைப்படம் கூட வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அங்கே என்ன நடந்தது எதற்காக இவர்கள் அந்த புகைப்படத்தில் சண்டை இடுகிறார்கள் என்கிற நம்ப தகுந்த மாதிரி எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆனாலும் ஜெயம் ரவி குடும்பத்துடன் நெருக்கிய குடும்ப நண்பராக இருக்கிறார் தனுஷ் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக செப்டம்பர் 9ஆம் தேதி அறிக்கை ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு உறுதி செய்த நிலையில். இதே ஜெயம் ரவி 2015 ஆவது வருடம் செப்டம்பர் 9ஆம் தேதி. அதாவது தன்னுடைய மனைவியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த செப்டம்பர் 9 அதே தேதி 2015 ஆவது வருடம் தன்னுடைய twitter பக்கத்தில் தனுசும் ஜெயம் ரவி மனைவியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜெயம் ரவி.
புதிதாக கிடைத்த உடன்பிறப்புகள் என்று பதிவு செய்திருந்தார், இந்த பதிவு தற்பொழுது ஜெயம் ரவி அவருடைய மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்த பின்பு செம்ம வைரல் ஆகி வரும் நிலையில். ஜெயம் ரவியே அவருடைய மனைவி உடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புதியதாக கிடைத்த உடன் பிறப்புகள் என்று தன்னுடைய மனைவியும் தனுசும் சகோதர சகோதரிகள் என்கின்ற அடிப்படையில் தான் பதிவு செய்துள்ளார்.அப்படி இருக்கையில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி விவாகரத்துக்கு தனுஷ் எப்படி காரணமாக இருக்க முடியும் என்கின்ற ஒரு விவாதமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.