ஜெயம் ரவி மாமியார் கொடுத்த டார்ச்சர்… மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் நடிகர் ஜெயம் ரவி..

0
Follow on Google News

சமீப காலமா தமிழ் சினிமா துறையினர் விவாகரத்து ஓய்ந்த பாடில்லை, தொடர்ந்து ஒருவர் தொடர்ந்து ஒருவர் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வருகிறார்கள். இந்த இடைவிடாத விவாகரத்துக்கு தொடக்க புள்ளியாக இருந்தது நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா. அவரை தொடர்ந்து இயக்குனர் பாலா- முத்து மலர், அடுத்து ஜிவி பிரகாஷ் – சைந்தவி, தற்போது அந்த வரிசையில் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி கல்லூரியில் படிக்கும் பொழுதே ஆர்த்தியை காதலித்து வந்தார், ஆர்த்தி மிகப்பெரிய கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார். இந்த நிலையில் குடும்பம் மிகப்பெரிய வசதியானது குடும்பம் என்பதால் மகன் ஜெயம் ரவியின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார் அவருடைய தந்தை எடிட்டர் மோகன்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் 2009 ஆண்டு பிரம்மாண்டமான நடந்து, இதுவரை எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஜெயம் ரவி அவருடைய அண்ணன் இயக்கத்தில் நடித்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற படங்கள் சரிவர போகவில்லை. இதன் காரணமாக ஜெயம் ரவியை மீண்டும் சினிமாவில் நிலைநிறுத்த அவருடைய மாமியார் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தொடர்ந்து படம் எடுத்து வந்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தாலும் கூட, அடுத்தடுத்து வந்த படங்கள் தோல்வியையே கொடுத்தது. இந்த நிலையில் தொடர்ந்து மருமகன் ஜெயம் ரவிக்கு வைத்து படம் தயாரித்து வரும் மாமியார் சுஜாதா விஜயகுமார் சினிமா துறையில் A to Z என அனைத்து துறைகளிலும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒரு தயாரிப்பாளராக அவரிடம் நயா பைசா கூட யாரும் ஏமாற்ற முடியாத அளவுக்கு கைதேர்ந்தவர். இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியும் அவருடைய மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெருவதற்கு, முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த போது ஒரு நடிகையிடம் அவர் கிசுகிசுவில் சிக்கியது தான் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜெயம் ரவி தான் மனைவியை விட்டு பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும்,

ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்பத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்கின்ற தகவல் எப்படி சினிமா வட்டாரத்தில் பரவியது என விசாரித்த போது. ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் கதையை சொல்வதற்கு ஜெயம் ரவியை சந்திக்க செல்லும் இயக்குனர்கள் சென்றால் அவர் மாமியார் தான் கதை கேட்கிறார்.

அந்த வகையில் அவருடைய மாமியார் மிகப்பெரிய கெடுபிடி காட்டி வருவதால் அவர் மாமியாரை பிடிக்காத சினிமா துறையினர் தான், ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்று கிளப்பி விட்டுள்ளார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யாமல் சேர்ந்து வாழ இருவருக்கும் இடையில் அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் சமரச முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.